அமிர்தா வேணாம்.! வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோ.! இல்லைனா நம்ம தெருவுல தான் நிக்கணும்.!

வெளியிட்டது

வர்ஷினியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நம் குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்று எழிலின் பாட்டி ஈஸ்வரி எழிலை மிரட்டுவது போல ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் எழில் மனம் மாறுவரா என்ற கேள்வி பாக்கியலட்சுமி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் கோபி. அன்று தொடங்கி இன்று வரை பிரச்சனைகள் நீண்டு கொண்டே வருகிறது. பாக்யா தற்போது வசித்து வரும் வீடு கோபியின் சொந்த உழைப்பில் கஷ்டப்பட்டு லோன் வாங்கி 40 லட்சத்திற்கு கட்டிய வீடு என்பதால் அதை விற்று விட தற்போது கோபி முடிவு எடுத்திருக்கிறார். விவாகரத்து சமயத்தில் இந்த வீடு கட்டிய செலவு 40 லட்சத்தை நான் தவணை முறையில் திருப்பி செலுத்தி விடுகிறேன் என்று பார்க்கியா கோபியிடம் சவால் விட்டிருந்த நிலையில், தற்போது கோபி அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமிர்தா வேணாம்.! வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோ.! இல்லைனா நம்ம தெருவுல தான் நிக்கணும்.! 1
ஆனால் பாக்யாவால் அந்த தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. திருமண ஆர்டர் கிடைத்தால் அதில் கேட்டரிங் சர்வீஸ் செய்து சம்பாதித்து கடனை அடைத்து வீட்டை தன தாக்கிக் கொள்ள பாக்கியா திட்டமிட்டு இருந்தார். பின்னர் ஐடி கம்பெனி ஒன்றில் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து அதன் மூலமாக சம்பாதித்து விடலாம் என்று கணக்கு போட்டு இருந்தார். ஆனால் அனைத்தும் வீணாகிவிட்டது. அவருக்கு இரண்டுமே கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு பணம் சம்பாதிக்கும் நிலைமையும் போய் கடனாளியாக நிற்கிறார் பாக்யா. இந்த நிலையில் வீடு பிரச்சனை மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. வீட்டின் வாசலில் கோபிநாத் என்கிற பெயரை மாற்றி பாக்கியலட்சுமி என்ற பெயர் பலகையை மாட்டுகிறார் எழில். இதனால் கோபி மிகுந்த கடுப்படைகிறார். 40,000 ஆக இரண்டு தவணை மட்டுமே பணத்தை செலுத்திவிட்டு வீட்டை உன் பெயரில் மாற்ற நினைக்கிறாயா? இது இன்னும் என்னுடைய வீடு தான் என்று கோபி பாக்கியாவிடம் சண்டையிடுகிறார்.


மேலும் இப்போதே வீட்டை விற்க போகிறேன். இன்றைய மார்க்கெட் ரேட் 70 லட்சத்தை கொடுத்து இந்த வீட்டை உங்களுடைய ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இதனால் எழிலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தற்போது இந்த விஷயம் எழிலை ஒருதலையாக காதலித்து வரும் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினிக்கு தெரிய வருகிறது. இதனால் தயாரிப்பாளரிடம் செல்லும் எழில் தன்னுடைய கதையை வேறு ஒருவருக்கு விற்க இருப்பதாக கூறுகிறார். ஆனால் அப்படியெல்லாம் விற்க முடியாது. என்னுடைய மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல். நானே உனக்கு அந்த 70 லட்ச ரூபாய் பணத்தை தருகிறேன் என்று அந்த தயாரிப்பாளர் கூறுகிறார். இதனால் குழப்பத்தில் உறைந்து போய் நிற்கிறார் எழில். இந்த நிலையில் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நம் குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்று எழிலின் பாட்டி ஈஸ்வரி எழிலை மிரட்டுவது போல ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் எழில் மனம் மாறுவரா என்ற கேள்வி பாக்கியலட்சுமி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்