பாக்கியாவுக்கு ஆப்பு மேல் ஆப்பு அடித்த கோபி.! நிலைகுலைந்து போன பாக்கியா மற்றும் ராமமூர்த்தி.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் கோபி. அன்று தொடங்கி இன்று வரை பிரச்சனைகள் நீண்டு கொண்டே வருகிறது. பாக்யா தற்போது வசித்து வரும் வீடு கோபியின் சொந்த உழைப்பில் கஷ்டப்பட்டு லோன் வாங்கி 40 லட்சத்திற்கு கட்டிய வீடு என்பதால் அதை விற்று விட தற்போது கோபி முடிவு எடுத்திருக்கிறார். விவாகரத்து சமயத்தில் இந்த வீடு கட்டிய செலவு 40 லட்சத்தை நான் தவணை முறையில் திருப்பி செலுத்தி விடுகிறேன் என்று பாக்கியா கோபியிடம் சவால் விட்டிருந்த நிலையில், ஆனால் பாக்யாவால் அந்த தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தற்போது கோபி அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பாக்கியாவுக்கு ஆப்பு மேல் ஆப்பு அடித்த கோபி.! நிலைகுலைந்து போன பாக்கியா மற்றும் ராமமூர்த்தி.! 1

இப்போதே வீட்டை விற்க போகிறேன். இன்றைய மார்க்கெட் ரேட் 70 லட்சத்தை கொடுத்து இந்த வீட்டை உங்களுடைய ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கோபி சென்று விடுகிறார். இதனால் பாக்கியாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. திருமண ஆர்டர் கிடைத்தால் அதில் கேட்டரிங் சர்வீஸ் செய்து சம்பாதித்து கடனை அடைத்து வீட்டை தன தாக்கிக் கொள்ள பாக்கியா திட்டமிட்டு இருந்தார். பின்னர் ஐடி கம்பெனி ஒன்றில் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து அதன் மூலமாக சம்பாதித்து விடலாம் என்று கணக்கு போட்டு இருந்தார். ஆனால் அனைத்தும் வீணாகிவிட்டது. அவருக்கு இரண்டுமே கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு பணம் சம்பாதிக்கும் நிலைமையும் போய் கடனாளியாக நிற்கிறார் பாக்யா.

இந்த நிலையில் வீடு பிரச்சனை மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. வீட்டின் வாசலில் கோபிநாத் என்கிற பெயரை மாற்றி பாக்கியலட்சுமி என்ற பெயர் பலகையை மாட்டுகிறார் எழில். இதனால் கோபி மிகுந்த கடுப்படைகிறார். 40,000 ஆக இரண்டு தவணை மட்டுமே பணத்தை செலுத்திவிட்டு வீட்டை உன் பெயரில் மாற்ற நினைக்கிறாயா? இது இன்னும் என்னுடைய வீடு தான் என்று கோபி பாக்கியாவிடம் சண்டையிடுகிறார். இதனால் பூர்வீக சொத்தை விற்று அந்த காசை கொண்டு கோபியின் கடனை அடைத்து விடலாம் என்று ராமமூர்த்தி தாத்தாவும், பாக்கியவும் முடிவெடுத்து சொந்த ஊருக்கு செல்கின்றனர். ஆனால் நிலத்தை வாங்குபவரிடம் நான் கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்லி கோபி மிரட்ட, வாங்க வந்தவரும் நிலத்தை வாங்காமல் திருப்பி செல்கிறார். இது பாக்கியாவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது. எப்படி 70 லட்சத்தை கொடுத்து பாக்கியா வீட்டை சொந்தமாக போகிறார் என்பது தெரியவில்லை. அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்