சீரியலில் இருந்து விலகியது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசிய திவ்யா கணேஷ்.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், தற்போது விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் இருந்து விலகி உள்ள செய்தி தற்போது கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மூத்த மகன் செழியனின் மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திவ்யா. ராமநாதபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக திரைத்துறையில் நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீரியலில் இருந்து விலகியது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசிய திவ்யா கணேஷ்.! 1

 

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி, சுமங்கலி, விஜய் டிவியில் இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை, ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு போன்ற பல சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, செல்லம்மா போன்ற சீரியல் நடித்து வருகிறார். இதில் பாக்கியலட்சுமியில் ஜெனியின் கதாபாத்திரம் வரவேற்பு பெற்று இருக்கிறது. மாமியாருக்கு மிகுந்த ஆதரவாக இருக்கும் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் திவ்யா. செல்லம்மா சீரியலில் மேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது செல்லம்மா சீரியல் இருந்து விலகி இருக்கிறார் திவ்யா அவருக்கு பதில் ஸ்ரீயா என்பவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தனது சொந்த காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகினார் என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் லைவ் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் நான் சொந்த காரணங்களுக்காக விலகவில்லை . செல்லம்மா தொடரில் வேலை செய்யும் போது என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி இல்லை என்றால் வேலையை விடுவது தானே முறை அதனால் தான் விலகிவிட்டேன் என்று பேசியுள்ளார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன் அந்த சீரியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பதில் அளித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்