ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் விஜய் தொலைக்காட்சியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ஒருவர் இணைய இருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘கார்த்திகை தீபம்’ கார்த்திக் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தத் தொடரில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முன்னாள் ராதிகாவாக நடித்து வந்த ஜெனிஃபர் என்பவர் புதிய கதாபாத்திரத்தில் இணைய இருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருமணம் ஆகி குழந்தை பிறந்தது, தந்தை இறப்பு ஆகிய காரணங்களாலும், கதை செல்லும் போக்கு சரியில்லை என்கிற காரணத்தினாலும் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார் ஜெனிஃபர். அதன் பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘அம்மன்’ சீரியலில் நடித்து வந்தார். தற்போது ‘கார்த்திகை தீபம்’ தொடரின் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
இந்த தகவலை ஜெனிஃபர் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். “‘கார்த்திகை தீபம்’ சீரியலில் நடிக்கப் போகிறேன். ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா கதாபாத்திரத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தீர்களோ, அதே போல் இந்த தொடரில் ரம்யா கதாபாத்திரத்திற்கும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை. இந்த அழகிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஜீ தமிழுக்கு நன்றி” என்று பகிர்ந்து இருக்கிறார். ரேஷ்மா பசுபுலேட்டிக்கு முன்பாக ராதிகாவாக நடித்து அசத்தியிருந்தவர் ஜெனிஃபர். அவரை ‘பாக்கியலட்சுமி’ ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.