ஹே எப்புடிறா?? உனக்கு ரெண்டு பொண்டாட்டியா? கோபியை பார்த்து அரண்டு போன தாடி பாலாஜி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி பழனிச்சாமியிடம் சென்று பாக்யா எங்கு சென்றாலும் அவருக்கு பின்னாலேயே வந்துவிடுகிறீர்களா? என்று சண்டையிடுகிறார். அப்போது அங்கு வரும் தாடி பாலாஜி கோபி தான் பாக்யா மற்றும் ராதிகா ஆகிய இருவரின் கணவர் என்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் அதை சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் இயக்குனர் எடுத்துச் செல்வது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. மேலும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பாக்கியலட்சுமி தொடர் பெற்றிருக்கிறது. இந்த கதையின் கதாநாயகன் கோபிக்கு திருமணமான மகன்கள் இருக்கும் நிலையில், அவர் இரண்டாவதாக தனது கல்லூரி காலத் தோழி ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹே எப்புடிறா?? உனக்கு ரெண்டு பொண்டாட்டியா? கோபியை பார்த்து அரண்டு போன தாடி பாலாஜி.! 1

ஆனால் ராதிகாவுடன் திருமண வாழ்க்கை அவருக்கு சரியாக அமையவில்லை. எப்பொழுதும் சண்டை சச்சரவு என இருப்பதால் அவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நடுரோட்டில் கிடக்கிறார். இதை கண்ட கோபியின் தயார் கோபியை பாக்யாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு வரும் ராதிகா நானும் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி சண்டை இடுக்கிறார். இதனால் பாக்யா, ராதிகா, கோபி என அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்குகின்றனர் மேலும். இது மிகுந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. எப்பொழுதும் வீட்டில் சண்டை சண்டை சண்டை என இருந்து வருகிறது. இதனால் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு ஒரு திருமணத்திற்காக வெளியூருக்கு செல்கிறார். அங்கும் பாக்யா சமையல் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு சமைப்பதற்காக வருகிறார். இதனால் சென்ற இடத்திலும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் கோபி. மேலும் பாக்யாவுடன் ஆங்கிலம் வகுப்பில் படித்து வரும் பழனிச்சாமியும் அந்த திருமணத்திற்கு வந்ததால் கோபி மேலும் கடுப்பாகிறார்.


கோபி தற்போது பழனிச்சாமியிடம் சென்று பாக்யா எங்கு சென்றாலும் பின்னாலேயே வந்து விடுகிறீர்களா? என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் தாடி பாலாஜி செல்வியிடம் இது யார் என்று கேட்கிறார்? அப்போது கோபி தான் பாக்யாவின் கணவர் என்று செல்வி பதில் அளிக்கிறார். பின்னர் தாடி பாலாஜி ராதிகா இருக்கும் இடத்திற்கு செல்கிறார். அங்கு வரும் ஒருவர் இதுதான் கோபியின் மனைவி ராதிகா என்று ராதிகாவை அறிமுகப்படுத்துகிறார். இதனால் குழம்பிப்போன தாடி பாலாஜி பாக்யாவும் ராதிகாவும் கோபியின் மனைவிகளா என்று குழப்பத்தில் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்