பாக்கியாவுக்கு ஆப்பு மேல் ஆப்பு அடிக்கும் கோபி.! நிலை குலைந்து போன பாக்கியா.! இந்த வார ப்ரோமோ

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவை தற்போது மலேசிய உணவுகளை சமைக்க வைக்குமாறு கோபி ஒரு புதிய பிரச்சனையை கிளப்பியிருக்கிறார். இதனால் பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். கோபியின் சூழ்ச்சிக்கு பாக்யா பலியாவரா? இல்லை கோபி செய்த இந்த சூழ்ச்சியை முறியடித்து அவர் வெற்றி பெறுவாரா? என்பது தெரியவில்லை. பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகனாக இருக்கும் கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் ராதிகா உடனும் அவருக்கு சுமூகமான வாழ்க்கை இல்லை. எப்பொழுதும் சண்டை சச்சரவு என்று இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப் போன கோபி அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். அவரை மீண்டும் பாக்யாவில் வீட்டிற்கே கோபியின் தாயார் அழைத்து வந்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவுக்கு ஆப்பு மேல் ஆப்பு அடிக்கும் கோபி.! நிலை குலைந்து போன பாக்கியா.! இந்த வார ப்ரோமோ 1

பாக்யா, ராதிகா, கோபி என மூவரும் ஒரே வீட்டில் வசிக்கும் நிலையில் சண்டை நாளுக்கு நாள் பெரிதாகிறது. மேலும் பாக்யா இருக்கும் வீடு கோபி பெயரில் இருப்பதால் அந்த வீட்டை எப்படியாவது பாக்கியா வாங்கி விட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக தனது நண்பர் பழனிச்சாமி பரிந்துரையின் பெயரில் அவர் பாண்டிச்சேரியில் மிகப்பெரிய திருமண ஆர்டர் ஒன்றை புடிக்கிறார். இந்த திருமண ஆர்டர் மூலமாக கிடைக்கும் பணத்தைக் கொண்டு வீட்டை வாங்கிவிடலாம் என்று சொல்லி பாக்யா திட்டம் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் பாக்யாவின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தில் தற்போது கோபி திருமண வீட்டாரிடம் சென்று தேவையில்லாத விஷயம் ஒன்றை பத்த வைக்கிறார். திருமண வீட்டிற்கு மலேசியாவில் இருந்து நண்பர்கள் வரப் போகிறார்கள் என்று திருமண வீட்டார் கோபியிடம் கூறிக் கொண்டிருக்க, உடனே கோபி அவர்களுக்கு மலேசிய உணவுகளை சமைத்துக் கொடுக்கலாமே என்று கூறுகிறார்.


இதனால் திருமண வீட்டாரும் கேட்டரிங் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் பாக்யாவிடம் சென்று மலேசிய உணவுகளை சமைக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் மலேசிய உணவை சமைக்க தெரியாமல் மொபைலை பார்த்து சமைத்துக் கொண்டு இருக்கிறார் பாக்யா. இந்த நிலையில் அங்கு வரும் கோபி, நான் தான் மலேசியா உணவுகளை சமைக்க சொல்லி உன்னை பற்றி போட்டுக் கொடுத்தேன் என்று கூறுகிறார். இந்த சூழ்ச்சியில் இருந்து பாக்யா மீண்டு வருவாரா? இனி என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்