அம்மாவாக நின்ற ராதிகா.! தாமதமாக வந்த பாக்யா.! வார்த்தைகளால் காயப்படுத்தும் இனியா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியாவிற்கு நடக்கும் பாராட்டு விழாவில் ராதிகா அம்மா ஸ்தானத்தில் நின்று பரிசுகளை பெற்றுக்கொள்கிறார். இதனால் கடுப்பான இனியா பாக்யாவை பார்த்து இனிமேல் நான் உன்னிடம் பேசப்போவதில்லை என்று கோபப்பட்டு கத்திக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியா 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்திருக்கிறார். இதனால் இனியாவிற்கு பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்கு வைதேகி நகர் குடியிருப்பு சங்கம் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிலையில் சீக்கிரம் வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு சமையல் ஆர்டர் செய்யப்போன பாக்யாவிற்கு அங்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மாவாக நின்ற ராதிகா.! தாமதமாக வந்த பாக்யா.! வார்த்தைகளால் காயப்படுத்தும் இனியா.! 1
இனியாவின் மதிப்பெண்கள் குறித்து கவலை கொள்ளும் பாக்யா சமையலில் கவனம் செலுத்தாமல் போன் செய்து பேசுவதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் பாயாசத்தை செல்வி தீய விட்டு விட்டார். இதனால் கடுப்பான மாப்பிள்ளை விட்டார் வேண்டுமென்றே சாப்பாட்டை சரியாக செய்யாமல் தங்களை அவமதித்துவிட்டதாக கூறி சண்டை போடுகின்றனர். இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் பாக்யா அங்கு மாட்டிக்கொள்ள இனியாவுக்கு வைதேகி நகர் குடியிருப்பு சங்கம் பாராட்டு விழாவை நடத்துகின்றனர். அப்போது ராதிகாவுடன் அங்கு வரும் கோபி தான் தான் இனியாவின் பெற்றோர்கள் என்று சொல்லி மேடையில் நிற்கின்றனர். இதனால் இனியாவிற்கு பெருத்த ஏமாற்றம் நிகழ்கிறது. பின்னர் பாக்யாவை பழனிச்சாமி அழைத்து வர தாமதமாக மேடைக்கு வந்து சேர்க்கிறார் பாக்யா. இதனால் கடுப்பில் இருக்கும் இனியா பாக்யாவை கடிந்து கொள்கிறார்.

என்னை விட எனக்கு உனக்கு உன் சமையல் ஆர்டர் தான் முக்கியமாக போய்விட்டதல்லவா? இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதே, நான் உன் கூட பேசவே மாட்டேன் என்று சொல்லி பாக்யாவை மிகவும் காயப்படுத்துகிறார். இதனால் கலங்கி நிற்கும் பாக்யா என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்