ராதிகா வீட்டிற்கு சென்று கோபியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் பாக்கியா | BaakiyaLakshmi

வெளியிட்டது

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாக்கியலெட்சுமி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு தொடர். பாக்கியலெட்சுமி சீரியலை மக்கள் விரும்பி பார்க்க ஒரு காரணம் நம் வீட்டில் இருக்கும் அம்மாக்கள் போலவே யதார்த்தமான நடிக்கும் பாக்கியாவும், மனைவி இருக்கும் போதே கள்ளத்தனமாக இன்னொரு காதல் செய்யும் கதாநாயகன் கோபியும் தான். கோபி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக விறுவிறுப்பான காட்சிகளுடன் சென்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி. ப்ரோமோ வீடியோ கீழே உள்ளது..

ராதிகா வீட்டிற்கு சென்று கோபியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் பாக்கியா | BaakiyaLakshmi 1

இந்ந வகையில் நேற்று ஒளிபரப்பான தொடரில் குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபி, பாக்கியா தான் தன்னுடைய மனைவி என்பதை போட்டு உடைத்துவிட்டார். இதனால் மனமுடைந்த ராதிகா தனது தோழிக்கு இத்தனை நாள் தான் துரோகம் செய்து வருவதை நினைத்து கண்ணீர் வடிக்கிறார், பிறகு கோபியை வீட்டைவிட்டு அடித்து துரத்தி விடுகிறார். சோகத்துடன் வீடு திரும்பும் கோபி தூக்கத்தில் ராதிகாவும், பாக்கியாவும் தனக்கு வேண்டும் என்றும், இருவரும் நல்லவர்கள் என்றும் புலம்புவதை பாக்கியா கேட்டு விடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலில் ரசிகர்கள் ப்ரோமாவிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கே சென்றுவிட்டார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு மாற்றாக பாக்கியா கோபிக்கு வக்காலத்து வாங்கி பேசிகிறார். நீங்கள் விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழுங்கள் என ராதிகவை வாழ்த்துகிறார். இதனால் ராதிகா ஒரு முடிவை எடுக்க நினைக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the promo below..

Video Courtesy: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்