காரை வேகமாக ஓட்டி சென்ற பாக்யா.! பாக்யாவை பார்த்து அரண்டு போய் ஓடிய கோபி.! இதோ ப்ரோமோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி கார் ஓட்டும் திறமையை பார்த்து தற்போது கோபி நடுங்கி ரோட்டில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார். செம காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு எதுவும் தெரியாது, அவர் படிக்காதவர் என்று சொல்லி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் அந்த சீரியலின் கதாநாயகனான கோபி. ஆனால் தற்போது கதையில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பாக்யாவிற்கு அடுத்தடுத்து பாசிட்டிவான நல்ல விஷயங்கள் வாழ்க்கையில் நடந்து வருகிறது. அவரால் காண்ட்ராக்ட் எடுக்க முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர் தற்போது ஐடி கம்பெனியின் கேன்டீன் காண்ட்ராக்ட்டை பிடித்திருக்கிறார். அதற்கு தடையாக இருந்த கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவின் சதி திட்டங்களையும் அவர் முறியடித்து அந்த ஐடி கம்பெனி காண்ட்ராக்டை பிடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காரை வேகமாக ஓட்டி சென்ற பாக்யா.! பாக்யாவை பார்த்து அரண்டு போய் ஓடிய கோபி.! இதோ ப்ரோமோ.! 1

இந்த செய்தியை கேட்ட கோபி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். அதற்கு காரணம் அவர் பாக்யாவிற்கு எதுவுமே தெரியாது என்று கோபி நினைத்து கொண்டு இருந்த நிலையில் பாக்கியா அடுத்தடுத்து அதிரடி ஆட்டங்களை நடத்தி வருகிறார் .இதை ராதிகாவிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். பாக்யா ஒரு முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அவர் சமையல் ஆர்டர்களை எடுத்து வீட்டை வாங்குவதற்கு இரண்டு லட்ச ரூபாயை எனக்கு முதல் தவணையாக கொடுத்துவிட்டார். தற்போது ஐடி கம்பெனியின் கேண்டீன் காண்டிராக்ட்டையும் பிடித்து விட்டார். அந்த வீட்டில் இருந்தபோது பாவமான பூனை போல் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருப்பார். ஆனால் அந்த முட்டாளுக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது என்று பாக்யாவை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பாக்யா அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறார். தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக ஆங்கிலம் பேசும் வகுப்பிற்கும் அவர் சென்றிருக்கிறார்.

பாக்யாவின் வளர்ச்சியை பார்த்து பிரமிப்பு அடைந்து கொண்டிருக்கும் கோபிக்கு அடுத்த பேரடியாக பாக்யா கார் ஓட்டுவது அமைந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாக்யாவின் கார் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அதை ஓரமாக நிறுத்துமாறு வேன் டிரைவர் ஒருவர் கூற அந்த காரை தானே எடுத்து ஓரம் வீட்டிற்குள் ஏற்றி பார்க்கிங் செய்கிறார் பாக்யா. அதை ரோட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கோபி பாக்யாவின் டிரைவிங் திறமையை பார்த்து ரோட்டில் அங்கும் இங்கும் காமெடியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்