பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தன்னிடம் சொல்லாமல் ஆங்கில வகுப்பிற்கு பாக்கியா சென்றதால் கோபமாக இருக்கும் மாமியார் ஈஸ்வரியை பாக்யா சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியும் சமாதானம் ஆகிவிட்டதாகவே தெரிகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இல்லத்தரசிகள் பலரும் இந்த தொடரை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்தத் தொடரின் கதாநாயகியாக இருக்கும் பாக்யா பல தடைகளை மீறி தற்போது ஐடி கம்பெனியின் கேண்டீன் காண்டிராக்டை பிடித்திருக்கிறார். இதே ஐடி கம்பெனியில் தான் பாக்யா கணவர் கோபியின் இரண்டாவது மனைவியும் வேலை பார்த்து வருகிறார். அவர் பாக்யாவிற்கு இந்த காண்ட்ராக்டை கொடுக்கக் கூடாது என்று பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாக்யாவோ கஷ்டப்பட்டு இந்த காண்டிராக்ட்டை பிடித்திருக்கிறார். மேலும் கடை திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைத்து குத்து விளக்கு ஏற்றி கடையையும் திறந்து இருக்கிறார். கேன்டீன் காண்ட்ராக்ட் எடுக்க வந்தபோது ராதிகா பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பேசி மிகவும் அவமானப்படுத்துகிறார். அதற்காக எப்படியாவது ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாக்யா துடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கும் செல்கிறார். அங்கு தனது நண்பர்களை கடை திறப்பு விழாவிற்கும் அழைத்து வருகிறார். அவர்களை பார்த்து ஈஸ்வரி இவர்கள் எல்லாம் யார் என்று கேட்க இனியா, “அம்மா ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்கிறார்களே அங்கு உடன் படிப்பவர்கள்” என்று கூறுகிறார். இதனால் ஈஸ்வரி கோபம் அடைகிறார்.
தற்போது வீட்டிற்கு வரும் பாக்யா ஈஸ்வரியிடம் கேண்டீன் காண்டிராக்ட் எடுக்க சென்ற சமயத்தில் தன்னை ராதிகா ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்தியதை கூறுகிறார். அப்போது பாக்கியா அவளுக்கு என்ன பெரிய மகாராணி என்று நினைப்பா என்று கோபமாக கேட்கிறார். பின்னர் நான் ஆங்கில வகுப்பிற்கு சென்றதில் எந்த தவறும் இல்லை என்று பாக்யா கேட்க எந்த தவறும் இல்லை ஆனால் என்னிடம் சொல்லிவிட்டு செல்லாது தான் தவறு என்று கூறுகிறார் ஈஸ்வரி. இதனால் பாக்யாவை ஆங்கில வகுப்பிற்கு ஈஸ்வரி அனுப்புவதில் எந்த தடையும் இருக்காது என்று தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television