நிலா பாப்பாவை கொஞ்சி விளையாடும் ஈஸ்வரி பாட்டி..! இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு..!

வெளியிட்டது

பாக்கியலெட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஈஸ்வரி பாட்டி மற்றும் நிலா பாப்பா இருவரும் நண்பர்களாகி விட்டனர். அந்த அழகிய காட்சியை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது விஜய் டிவி. விஜய் தொலைக்காட்சியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு குடும்ப பாங்கான கதை தான் பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியலில் பாக்கியலட்சுமி இளைய மகனாக இருக்கும் எழிலுக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதில் அமிர்தா திருமணமாகி சில வருடங்களிலேயே கணவனை இழந்த கைம்பெண் ஆவார். குழந்தை வயிற்றில் இருக்கும் போது கணவனை இழந்து விட்டதால் அவர் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக எழிலை சந்திக்கும் அமிர்தாவுக்கு அவருடன் காதல் ஏற்படுகிறது. பின்னர் பல தடைகளை மீறி எழிலை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்திற்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த போதிலும் எழிலின் அண்ணன் செழியனும், பாட்மி ஈஸ்வரியும் சம்மதம் தெரிவிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிலா பாப்பாவை கொஞ்சி விளையாடும் ஈஸ்வரி பாட்டி..! இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு..! 1

இருந்தபோதிலும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. பாட்டிக்கு மாத்திரை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் அமிர்தா கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியிடம் நெருங்கி வருகிறார். மேலும் அவ்வப்போது ஈஸ்வரியின் அறைக்கு செல்லும் நிலா பாப்பா ஈஸ்வரியை முத்தம் கொடுத்தும் அவரிடம் விளையாண்டும் அவரை மயக்கி வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி பாட்டியும் நிலா பாப்பாவும் அருகருகே அமர்ந்து விளையாண்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஈஸ்வரி பாட்டியின் மடியில் ஏறி அமர்ந்து கொள்ளும் நிலா ஈஸ்வரிக்கு முத்தமும் கொடுக்கிறார். இதனால் நெகிழ்ந்து போகும் ஈஸ்வரி பாட்டி உனக்கு யார் இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஒரு ராமமூர்த்தி தாத்தாவிடம் நீ ஏன் இன்னும் அமிர்தா மற்றும் எழில் மீது கோபமாக இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் செய்த தப்பிற்கு குழந்தை என்ன செய்யும் நான் குழந்தையிடம் சமாதானம் ஆகிவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஈஸ்வரியிடம் பேசும் ராமமூர்த்தி தாத்தா, நீ நினைத்துப் பார், நிலா வயிற்றில் இருக்கும் பொழுதே அவரது தந்தை விபத்தில் இறந்து விட்டான். தந்தை பாசமே கிடைக்காமல் ஏங்கிக் கொண்டு வந்த இந்த குழந்தைக்கு நமது எழில் தந்தையாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார். ஆனால் அது எப்படி முடியும்? என்று ஈஸ்வரி திருப்பி கேட்கிறார். இருந்தபோதிலும் ஈஸ்வரியை சமாதானம் செய்வதற்காக ராமமூர்த்தி தாத்தா தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் ஈஸ்வரியும் மனம் மாறி அமிர்தாவை ஏற்றுக் கொள்வார் என்றே தெரிகிறது. இப்போதே கொஞ்சமாக அவர் மனம் மாறியதாகவே தெரிகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்