பழனிசாமியிடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த பாக்யா.! திரு திருவென முழித்துக் கொண்டிருக்கும் கோபி.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி தொடரில் தற்போதைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நடு ரோட்டில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி மற்றும் பழனிச்சாமியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் கோபி. இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபிக்கு பொறாமை ஏற்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலின் தற்போது கோபி தனது மூத்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 28 ஆண்டுகள் கடந்த பின்பு, திருமணமான பிள்ளைகளை வைத்துக்கொண்டு கோபி இவ்வாறு செய்தது பலருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக கோபியின் பெற்றோர்களுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் கோபியிடம் இருந்து விலகி அவர்கள் தனது மருமகள் பாக்யா உடனே வசித்து வருகின்றனர். பாக்யாவும் அவர்களை தாய் தந்தை போல பாவித்து நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பழனிசாமியிடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த பாக்யா.! திரு திருவென முழித்துக் கொண்டிருக்கும் கோபி.! 1

தற்போது பாக்கியா ஐடி கம்பெனி ஒன்றின் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து அந்த வருமானத்தின் மூலமாக தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். மேலும் ஐடி கம்பெனியில் ஹெச் ஆர் மேனேஜராக இருக்கும் கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா பாக்யாவிற்கு இந்த ஆர்டர்கள் கிடைக்கக்கூடாது என்று பல்வேறு வகைகளில் தடைகளை போடுகிறார். ஆனால் அனைத்தையும் மீறி பாக்கியா அந்த கேன்டீன் காண்ட்ராக்ட் ஆர்டரை பிடித்து விட்டார். மேலும் ஐடி கம்பெனி கேண்டினில் வேலை பார்ப்பதால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி ஆங்கில வகுப்பிற்கும் செல்கிறார். அங்கு அவருக்கு பல நண்பர்கள் கிடைக்கிறார்கள் குறிப்பாக பழனிச்சாமி என்ற நண்பர் கிடைக்கிறார். அவரின் காமெடி பேச்சுக்களும் கலாய் பேச்சுகளும் பாக்யாவிற்கு மிகவும் பிடித்துப் போக இருவரும் மிகுந்த நண்பர்களாகியிருக்கின்றனர். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணியத்தை கடைப்பிடித்து நண்பர்களாகவே பழகிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருமுறை பாக்கியா பழனிச்சாமி உடன் வண்டியில் செல்வதை பார்த்து விடும் கோபி, பாக்கியாவிடம் வந்து யார் அந்த ஆள்? அவருடன் என் வண்டியில் செல்கிறார் என்று கோபமாக கேட்க, நான் யாருடன் வேண்டுமானாலும் வண்டியில் செல்வேன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்னை பின்தொடராதீர்கள் என்று எச்சரித்து அனுப்பினார். இந்த நிலையில் நேற்று நிலா பாப்பாவிற்கு பிறந்தநாள் வர அதற்காக பாக்யா நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். நிகழ்ச்சி முடிந்து பாக்யாவும் பழனிச்சாமியும் வெளியில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த கோபி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்