பாக்கியலட்சுமி சீரியலில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராதிகாவின் குழந்தை மயூ, கோபியிடம் ஒரு கேள்வியை கேட்டது இதனால் மனம் நெகிழ்ந்து போனார் கோபி. அதை பார்த்த ராதிகா கண்கலங்கி அழுதார். விஜய் டிவியின் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருப்பது பாக்கியலட்சுமி, பல திருப்பங்களுடன் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கோபி. ராதிகாவிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மயூ என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார். கோபிக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது, மற்ற இரண்டு குழந்தைகளில் ஒருவர் திருமண வயதிலும் மற்றொருவர் பள்ளியிலும் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கோபி முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று பாக்யாவும் அவரது குடும்பத்தினரும் போராடி பார்த்தனர். ஆனால் வலுக்கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டார் கோபி. ஆனால் ராதிகாவுடன் அவர் படும் இன்னல்களை சில நாட்களாக காமெடியாக காட்டி வருகின்றனர். ராதிகாவிற்கு சமைக்க தெரியாது. அதனால் கோபி அலுவலகத்திற்கு செல்லும் போது கூட அவர் எதுவும் சமைத்து வைக்கவில்லை. காபி கேட்டால் கூட ஆர்டர் செய்யுமாறு கோபியை படாதபாடு படுத்தி வருகிறார் ராதிகா. இதைப் பார்த்த ரசிகர்கள் பாக்யாவிற்கு துரோகம் செய்துவிட்டு போனீர்களே உங்களுக்கு நன்றாக வேண்டும் என்று கமெண்ட்டுகளை அடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் இரவு கட்டிலில் அமர்ந்து கொண்டு ராதிகா, மயூ, கோபி மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மயூ கோபியிடம் நீங்கள் என் அம்மாவை திருமணம் செய்து கொண்டீர்கள்தானே என்று கேட்க, அதற்கு கோபி உன் கண் முன்னால் தானே நான் திருமணம் செய்து கொண்டேன் ஏன் இப்படி கேட்கிறாய் என்று மயூவை பார்த்து கேட்கிறார். அதற்கு மயூ பிறகு ஏன் நான் உங்களை அங்கிள் என்று கூப்பிட வேண்டும் உங்களை அப்பா என்று அழைக்கட்டுமா? என்று பாவமாக கேட்கிறார் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கோபியும் ராதிகாவும் திணறிப் போய் கண் கலங்கி உள்ளனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television