பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை கோபி தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். கோபியின் கடைசி மகள் இனியா பள்ளியில் அமர்ந்து கொண்டு மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது ஆசிரியர்கள் கவனித்து விட்டனர். இதனால் வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வந்தால்தான் மீண்டும் வகுப்பறைக்கு அனுமதிப்பேன் என்று கூறி விடுகின்றனர். இதனால் இனியா வீட்டிற்கு வந்து ஒவ்வொருவரிடம் தன்னுடன் பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். முதலில் தனது தாத்தாவை அழைக்கிறார். ஆனால் பள்ளியில் எது சொன்னாலும் அதை வீட்டில் வந்து சொல்லக்கூடாது என்று இனியா கண்டிஷன் போடுகிறார். இதற்கு தாத்தா மறுப்பு தெரிவிக்கிறார். பின்னர் பாக்யாவிடம் சென்று இந்த விஷயத்தை இனியா கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பள்ளிகளில் போனை எடுத்துச் செல்கிறார்கள் என்று பாக்கியாவிடம் மறைமுகமாக இனியா சொல்ல, அது வெளிநாடு நம்ம ஊரில் அது போல் பள்ளிக்கு போனை எடுத்துச் செல்லக்கூடாது என்று பாக்யா சொல்கிறார். இதனால் பாக்கியாவிடம் உண்மையை சொல்ல இனியா தயங்குகிறார். பின்னர் கோபிக்கு கால் செய்யும் இனியா அவரை தன்னுடன் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். இந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து, இனியாவை கண்டிக்கின்றனர். மேலும் இனியாவை அடிக்கச் செல்கின்றனர். தாத்தாவையும் பாக்யாவையும் எதிர்த்து பேசும் இனியாவை ஈஸ்வரி பாட்டி அடிக்க செல்கிறார். இதனால் இனியா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற முடிவு எடுக்கிறார்.
அப்போது வீட்டிற்கு வரும் கோபியிடம் இனியா தன்னை எல்லாரும் அடித்து துன்புறுத்துவதாக கூறுகிறார். இதை சாக்காக பயன்படுத்திக் கொண்ட கோபி, இனியாவிடம் தன்னுடன் வருகிறாயா என்று கேட்கிறார். இதனால் இனியா என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. அவர் பெரும்பாலும் கோபியுடன் செல்வார் என்றே தெரிகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television