இனியா நீ ரூம்ல பெட்ல தூங்கு, நான் ஹால்ல படுத்துகிறேன்.! ராதிகா காட்டிய பெருந்தன்மை.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவுக்காக ராதிகா செய்துள்ள விஷயத்தை தற்போது ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி. இந்த ப்ரோமோவை பார்த்த பின்பு ராதிகா மேல் சிறிது மரியாதை கூடுகிறது. பாக்கியலட்சுமி தொடரில் பல திருப்பங்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் கோபியின் மூத்த மனைவியின் மகள் இனியா வீட்டில் நடந்த ஒரு சிறு பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தையுடன் சென்று விட்டார். தந்தைக்கு இரண்டாவதாக ராதிகா என்பவரிடம் திருமணம் ஆகி, அவர் எதிர்த்த வீட்டில் தான் குடியிருந்து வருகிறார். இனியாவை வீட்டில் உள்ள அனைவரும் திட்டிக் கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த கோபி தன்னுடன் வருமாறு இனியாவை அழைத்துச் சென்று விட்டார். இனியா தயங்கி தயங்கி கோபியுடன் சென்றார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

 

இனியா நீ ரூம்ல பெட்ல தூங்கு, நான் ஹால்ல படுத்துகிறேன்.! ராதிகா காட்டிய பெருந்தன்மை.! 1
ஏனென்றால் இனியாவுக்கு கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவையும் அவரது மகள் மயூவையும் பிடிக்கவில்லை. இவர்களை திருமணம் செய்த தந்தையையும் அவர் இவ்வளவு நாள் வெறுத்து வந்தார். ஆனால் தற்போது தந்தையுடனும், அவரது இரண்டாவது மனைவியுடனும் வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி ராதிகாவிடம் சென்று இனியா, உறங்குவதற்கு அறை வேண்டும் என்று சுற்றி வளைத்து கேட்கிறார். இதை புரிந்து கொண்டதாக ராதிகா, எதற்காக சிறிய வீடு பார்த்தீர்கள் என்று கேட்க, நீதான் என்னை அவசரப்படுத்தினாய் அதனால் தான் இந்த சிறிய வீட்டை பார்த்து விட்டேன் என்று கூறுகிறார். ஆனால் இல்லை இல்லை உங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்காகத்தான் மூத்த மனைவியின் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே வீடு பார்த்து இருக்கிறீர்கள் என்று பதிலுக்கு பேசுகிறார்.

ஆனால் கோபி சொல்ல வருவதை புரிந்து கொண்ட ராதிகா இனியாவும் மயூவும் ரூமில் படுத்துக்கொள்ளட்டும். நீங்களும் நானும் ஹாலில் பாய் விரித்து படுத்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையாக கூறுகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கோபி இனியாவையும் மயூவையும் உள்ளே படுக்க வைத்துவிட்டு, ஹாலில் வந்து ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் இனியா நான் ரூமில் படுக்கவில்லை உங்களுடன் படுத்து கொள்கிறேன் என்று ஹாலில் படுத்துக் கொள்கிறார். இதனால் ராதிகா உள்ளே மயூ தனியாக தூங்கிக் கொண்டிருக்கிறார். நான் உள்ளே செல்கிறேன் என்று அவர் எழுந்து உள்ளே சென்று விட்டார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்