இதான் உங்க ஊருல சாம்பாரா? ராதிகாவை மரணமாக கலாய்க்கும் ராமமூர்த்தி தாத்தா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அப்பா ராமமூர்த்தி, கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவை பாடாய்ப் படுத்தி எடுக்கும் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. பலரின் மனம் கவர்ந்த தொடராக இருக்கிறது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் தற்போது கோபியின் கடைசி மகள் இனியாவை கோபி தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவை இனியாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இனியா ராதிகாவுடன் பேசுவதே இல்லை. தனது பேத்தியை அழைத்து வருவதற்காக கோபியின் ராமமூர்த்தியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்து தங்குகிறார். இனியாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை ராமமூர்த்தி தாத்தா ராதிகா வீட்டில் தான் இருப்பார் என்று தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதான் உங்க ஊருல சாம்பாரா? ராதிகாவை மரணமாக கலாய்க்கும் ராமமூர்த்தி தாத்தா.! 1

தனது தாயை ஏமாற்றி தனது தந்தையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால் இனியாவுக்கு ராதிகாவை பார்த்தாலே பிடிப்பதில்லை. சமீபத்தில் கூட அவரது மகள் மயூவை பள்ளிக்கூடத்தில் பார்த்த இனியா அவரைப் பிடித்து கீழே தள்ளியிருந்தார். ஆனால் இதை எல்லாம் ராதிகா பொறுத்துக் கொண்டு இனியாவை தன் வீட்டில் சேர்த்துக் கொண்டார். தற்போது இனியாவுடன் தாத்தாவும் சேர்ந்து கொண்டு உள்ளார். நேற்று இனியா காலையில் காபி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வரும் கோபியிடம் எனக்கு காபி கொடுத்து விட்டார்கள் என்று புகார் கூறுகிறார். உடனே கோபி ராதிகாவை அழைத்து இனியா காபி குடிக்க மாட்டார் பால்தான் குடிப்பார் என்று கூறுகிறார். இதுபோல் தொடர்ந்து ராதிகாவிற்கு சில தர்ம சங்கடங்கள் ஏற்படுகிறது

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபியின் தந்தை ராமமூர்த்தியை சாப்பிட வருமாறு ராதிகா அழைக்கிறார். அவரும் சாப்பிட செல்கிறார். ஆனால் சாப்பாடு பற்றி ராதிகாவிடம் குறைகளை கூறுகிறார், சாம்பாரில் பருப்பில்லை, சோறு விதையாக இருக்கிறது என்று பல குற்றச்சாட்டுகளை கூறுகிறார். இதனால் கடுப்பான ராதிகா கோபியை முறைத்து பார்க்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the Below Video..!

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்