மீண்டும் இணைந்த மனங்கள்.! பாக்யாவை அழ வைத்த ராதிகா.! நெகிழ்ச்சியான ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது, ராதிகா பாக்கியாவை புரிந்து கொண்டு அவரிடம் மீண்டும் இணைய ஆரம்பித்திருக்கிறார். பாக்யாவும் ராதிகாவுடன் மீண்டும் இணைந்து இருக்கிறார். இந்த நெகிழ்ச்சியான ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பாக்யாவின் கணவர் கோபி தனது கல்லூரி காதலியான ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். அந்த திருமணத்திலிருந்து ஒவ்வொரு பிரச்சனைகளாக ஆரம்பிக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணைந்த மனங்கள்.! பாக்யாவை அழ வைத்த ராதிகா.! நெகிழ்ச்சியான ப்ரோமோ இதோ.! 1

பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பதை தெரிந்து கொள்ளாமலேயே ராதிகா கோபியுடன் நெருங்கி பழகி திருமணமும் செய்து கொள்கிறார். பாக்யாவும் ராதிகாவும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில், கோபியின் இந்த திருவிளையாடலால் ராதிகாவும் பாக்யாவும் ஒரு கட்டத்தில் பிரிந்து விடுகின்றனர் ராதிகா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பாக்யா எண்ணுகிறார். ஆனால் ராதிகாவிற்கு கோபியின் மூத்த மனைவிதான் பாக்யா என்ற விஷயமே தெரியாது. இப்படியான சூழ்நிலையில் தற்போது பல பிரச்சனைகளை கடந்து பாக்யா வந்து கொண்டிருக்கிறார். அரசு கேண்டீன் காண்ட்ராக்ட் எடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கான்ட்ராக்ட்டை கஷ்டப்பட்டு எடுத்து வந்து விட்டதாக செல்வி மற்றும் மருமகள் அமிர்தாவிடம் பாக்யா கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா அதைக் கேட்டு பாக்யாவிற்கு கை கொடுத்து வாழ்த்துக்களை கூறுகிறார். இதனால் நெகிழ்ந்து போகும் பாக்யா ராதிகாவுக்கு கண்கலங்கி நன்றி கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்