அமிர்தாவை தேடி பாக்யாவின் வீட்டுக்கே வந்த கணேஷ்.! அமிர்தாவை பார்த்து அதிர்ச்சியில் நிற்கும் கணேஷ்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அமிர்தாவை தேடி வரும் கணேஷ் பாக்கியலட்சுமியின் வீட்டிற்கே வந்து விடுகிறார். அமிர்தா தனது வீட்டு வாசலில் நிலாவிற்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருப்பதை நேரில் பார்த்தும் விடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியாவின் இரண்டாவது மகன் எழிலுக்கு அமிர்தா என்கிற பெண்ணுடன் திருமணம் முடிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அமிர்தாவை தேடி பாக்யாவின் வீட்டுக்கே வந்த கணேஷ்.! அமிர்தாவை பார்த்து அதிர்ச்சியில் நிற்கும் கணேஷ்.! 1

ஏற்கனவே திருமணம் ஆகி விபத்தில் கணவரை இழந்த நிலையில் கை குழந்தையுடன் இருந்த அவருக்கு எழில் வாழ்க்கை தருகிறார். இந்த நிலையில் கதையில் திடீர் திருப்பமாக இறந்து போனதாக கூறப்பட்ட அமிர்தாவின் கணவர் மீண்டும் உயிருடன் வருகிறார். அவர் தனது மனைவியையும் குழந்தையையும் தேடித் திரிகிறார். அப்போது அமிர்தா தனது வீட்டு வாசலில் நிலாவிற்கு சாப்பாடு ஊட்டுவதை பார்த்த அவர் தனது தாயாருக்கு போன் செய்து நான் அமிர்தாவை பார்த்து விட்டேன், எல்லோரும் பொய் சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர்கள். அமிர்தா தான் என்னுடைய மனைவி. நான் அவளை கூட்டிக்கொண்டு தான் என் வீட்டிற்கு வருவேன் என்று அமிர்தா வீட்டிற்கு செல்கிறார்.

இதனால் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அதை நகர்ந்து வருகிறது. எழில் என்ன முடிவெடுக்க போகிறார்? பாக்யா இந்த சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்? கணேஷ் உடன் சேர்ந்து வாழ அமிர்தா விருப்பம் தெரிவிப்பாரா? என்ற சஸ்பென்ஸ் உடன் கதை நகர்ந்து வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்