பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு ஒரு காபிக்காக திண்டாடும் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாக்கியலட்சுமி தொடர் அனைத்து தொடர்களிலிருந்தும் சற்றே வித்தியாசமானது. எல்லா தொடர்களிலும் இரண்டு மனைவிகள் கதை இருந்ம போதிலும் இந்த கதையை இயக்குனர் வித்தியாசமான முறையில் கொண்டு சென்றார். இறுதியில் கோபி முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டது போல கதையை நகர்த்திச் சென்று இருக்கிறார் இயக்குனர். முதல் மனைவி பாக்யாவை பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டிருந்தார் கோபி. அப்படியும் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து மூத்த மகனுக்கு திருமணமும் ஆகிவிட்டது.

ஆனால் கோபி இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தனது கல்லூரி காலத் தோழியான ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ராதிகாவின் முதல் கணவருக்கும் ராதிகாவிற்கும் சண்டை என்பதை தெரிந்து கொண்ட கோபி ராதிகாவின் வாழ்க்கையில் மெல்ல புகுந்து, இறுதியில் அவரை திருமணம் செய்து கொண்டு விட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று சீரியலை பார்த்து வந்த ரசிகர்களுக்கு, இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று இருந்தார் இயக்குனர். கோபி – ராதிகாவின் திருமணத்தில் ஏற்பட்ட பல தடங்கல்களை சமாளித்து இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இருவரும் தங்களது வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்கின்றனர்.
தற்போது பாக்கியாவின் வீட்டிற்கு எதிர் வீட்டிற்கே குடி வந்துள்ளனர். இதை நினைத்து செழியனும் பாக்யாவும் மிகுந்த கவலை அடைந்தனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் கோபிக்கு காபி கூட போட்டு தராமல் தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் ராதிகா. ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்து பார்க்க போகி காபி வேண்டும் என்று கேட்க கடையில் ஆர்டர் செய்யுமாறு கூறுகிறார் ராதிகா. பின்னர் தனக்கு மிகவும் பசிப்பதாக கோபி சொல்ல சமைத்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓட்ஸ் கஞ்சியை சமைத்து வருகிறார் ராதிகா. இதையெல்லாம் பார்த்த கோபி பணம் வெறுத்து விட்டார். இதைப் பார்த்து ரசிகர்கள் நீங்கள் பாக்யாவுடன் இருந்த பொழுது உங்களை எப்படி அவர் கவனித்துக் கொண்டார். உங்களுக்கு இது தேவைதான் என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர். Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television