கெட்டுப்போன இறைச்சியில் சமையல்..! வெடித்த கலவரம்..! சீல் வைக்கப்பட்ட பாக்கியா ஹோட்டல்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு ஏராளமான குடும்ப தலைவிகள் ரசிகைகளாக உள்ளனர். இதனால் இந்த நாடகம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வரும் வண்ணம் இருப்பதே இந்த தொடரின் சிறப்பு அம்சமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

கெட்டுப்போன இறைச்சியில் சமையல்..! வெடித்த கலவரம்..! சீல் வைக்கப்பட்ட பாக்கியா ஹோட்டல்..! 1

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், பாக்கியா கடையில் உணவு அருந்தி தனது மகள் உயிருக்கு போராடிவருவதாக ஒருவர் சண்டையிட்டு பாக்கியாவை அடிக்க செல்கிறார். அதனை மகன்கள் தடுக்கின்றனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த உணவு துறையினர். பாக்கியாவின் கடையை தீவிர சோதனை போடுகின்றனர்.

இந்த சோதனையில் கெட்டுப்போன இறைச்சி இருப்பது கண்டறியப்படுகிறது. இதனால் பாக்கியா கடைக்கு சீல் வைக்கின்றனர் அதிகாரிகள். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோபியின் திட்டப்படி எல்லாம் சரியாக நடப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் பாக்கியா அடுத்து என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்