விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், கோபி தனது ஓட்டல் உணவை கெடுக்க அனுப்பிய ஆள் என செஃப்பை கண்டுபிடிக்கிறார்.மேலும் அவரிடம் கோபி பேசுவதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைகிறார்.இதனால் கடுப்பாகிய பாக்கியா கோபியின் வீடு தேடி செல்கிறார். மேலும் தனது ஓட்டலுக்கு கெட்டபெயரை ஏற்படுத்த கோபி முயற்சி செய்ததை கண்டுபிடித்து விட்டதாக கூறி உள்ளார்.
மேலும் கோபி மீது போலீசில் பாக்கியா ஆதாரத்துடன் புகார் கொடுக்கிறார். இந்த புகாரை ஏற்ற போலீசார், கோபியை வீடு புகுந்து கைது செய்து செல்கின்றனர். இதனை பாக்கியா நின்று ரசித்து பார்க்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION