விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது செழியன் தந்தை கோபி உடன் குடித்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. தினமும் குடித்துக்கொண்டு வருவது குறித்து செழியனிடம் பாக்கியலட்சுமி கேட்ட பொழுது, தாத்தா இல்லாத வீட்டிற்கு வர கஷ்டமாக உள்ளதாகவும், மேலும் அலுவலகத்திலும் பிரச்சனை என்பதால் தான் குடிப்பதாக கூறுகிறார்.
இதனை கேட்ட பாக்கியா, தனக்கும் அத்தைக்கும் கூடத்தான் கஷ்டமாக இருக்கிறது அதற்காக நாங்களும் பார்க்கு சென்று குடிக்கட்டுமா என கேள்வி எழுப்பவே, செழியன் பதில் பேச முடியாமல் உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படித்தான் குழந்தைகளை பெற்றோர்கள் திருத்த வேண்டும் என பாக்கியாவுக்கு ஆதரவு கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION