பாக்கியவை குடும்பத்துல இருந்து பிரிச்சு நடுத்தெருவில் நிப்பாட்டுவேன்..! பாக்கியா ஹோட்டலுக்கு ஆள் அனுப்பிய கோபி..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியவை குடும்பத்துல இருந்து பிரிச்சு நடுத்தெருவில் நிப்பாட்டுவேன்..! பாக்கியா ஹோட்டலுக்கு ஆள் அனுப்பிய கோபி..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 1

தற்போது ராமமூர்த்தி உயிரிழந்து உள்ளார். இதனால் குடும்பமே சோகத்தில் உள்ளது. தந்தைக்கு இறுதி சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் கோபி கடும் கோபத்தில் உள்ளார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், தன்னை குடும்பத்தில் இருந்து பிரித்தது போல பாக்கியாவையும் பிரிக்க திட்டமிடுகிறார் கோபி.இதனால் தன்னுடைய ஓட்டலில் வேலை செய்பவரை பாக்கியா ஓட்டலுக்கு அனுப்புகிறார்.

மேலும் தன்னுடைய ஆள் மூலம் அங்கு கலவரத்தை ஏற்படுத்தி பாக்கியா குடும்பத்திற்குள் சண்டையை இழுக்க திட்டமிடுகிறார் கோபி. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் கோபியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்