தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல குடும்பங்களுடன் இக்கதை ஒற்றுப்போவதால் குடும்ப தலைவிகளிடம் இந்த சீரியல் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இதனால் சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாக்கியா கோபியை எதிர்த்து சமையல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற போராடி வருகிறார். அதே சமயம், இனியா நண்பர்களுடன் பப்பிற்கு சென்று அங்கு ஏற்படும் பிரச்னையால் போலீசிடம் சிக்கி கொள்கிறார். அவரை தேடி பாக்கியா போன் அடிக்கவே இனியா போனை எடுக்காமல் உள்ளார். இதனால் பதறிய பாக்கிய செழியனிடம் இனியாவை தேட சொல்கிறார்.
தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் இனியா எங்கும் தேடியும் கிடைக்காததால் செழியன் பாக்கியாவிடம் , இனியா கிடைத்துவிட்டதாக பொய் சொல்லுகிறார். இதனால் பாக்கியா நிம்மதி அடைந்து உள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பாக்கியா வெகுளியாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் இனியா குறித்து தெரிந்தால் பாக்கியா எப்படி தாங்கி கொள்வார் என கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION