விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நாளுக்கு நாள் தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , ராமமூர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்காமல் கோபி அங்கு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவரை பார்த்து கடுப்பாகிய ராமமூர்த்தி, இங்கே ஏன் வந்தே என கேட்டு கடுமையாக திட்டுகிறார். கோபி அனைவரின் முன்னாலும் அசிங்கப்பட்டு நிற்கிறார். மேலும் ஈஸ்வரியிடம் பேச முயற்சி செய்யவே, கோபியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட ஈஸ்வரி நீ என்னை அம்மா என்று கூப்பிடாதே என கூறுகிறார். மேலும் நாங்கள் செத்தாலும் வரவேண்டாம் என கூறுகிறார்.
இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. கோபிக்கு இது தேவை தான் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION