விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல குடும்ப தலைவிகளையும் ரசிகர்களாக கொண்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தொடரின் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த தொடருக்கு ரசிகர்கள் கூட்டமானது அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது. இனியா செய்த காரியத்தால் ராதிகா முன்பு பாக்கியா தலை குனிந்து உள்ளார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் இனியா பப்பிற்கு சென்றது தெரிந்த கோபி, பாக்கியாவிடம் இருந்து இனியவை அழைத்து செல்ல வருகிறார். இதற்கு பாக்கியாவும், ஈஸ்வரியும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இருந்தும் தனது மகளை அழைத்து செல்வேன் என கோபி அடம்பிடிக்கிறார். ஆனால் இனியா கோபி பின்னால் வர தயங்கி அவர் கையை தட்டி விடுகிறார். உடனே ஈஸ்வரி கோபியை வெளியே போடா என கூறி அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். இதனால் கோபி மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION