உங்க அம்மாவை தொலைச்சிடுவேன்..! ராதிகாவை எச்சரித்த பாக்கியா..! பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க அம்மாவை தொலைச்சிடுவேன்..! ராதிகாவை எச்சரித்த பாக்கியா..! பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 1

தற்போது தொடரில், ராமமூர்த்தி உயிரிழந்துள்ளார். பாக்கியா அத்தை ஈஸ்வரியிடம் பொட்டு வைக்க வேண்டும் என கூறவே, அதனை கேட்டுக்கொண்டு ஈஸ்வரி பொட்டு வைத்துக்கொள்கிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , பொட்டுவைத்த ஈஸ்வரியை ராதிகாவின் அம்மா கடுமையாக தாக்கி பேசுகிறார். புருஷன் இறந்து கொஞ்ச நாள்லயே பொட்டு வைப்பதாக இழிவாக கூறுகிறார்.

இதனால் ஈஸ்வரி வீட்டிற்கு வந்து இனி போட்டுவைக்க மாட்டேன் என கூறுகிறார். இதுகுறித்து கேள்விப்பட்ட பாக்கியா, ராதிகாவை நேரில் சந்தித்து, அவரின் அம்மாவை அமைதியாக இருக்க சொல்கிறார். இல்லையென்றால் தொலைச்சிடுவேன் என மிரட்டுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் பாக்கியாவை பாராட்டி வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்