பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சங்கராபரணம் ராஜலட்சுமியின் மகனின் திருமணம் தற்போது ஹைதராபாத்தில் வைத்து நடந்து முடிந்து இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கென்று பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த நாடகத்தின் கதாநாயகனான கோபியின் தாயாராக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கராபரணம் ராஜலட்சுமி.
ஆந்திராவைச் சேர்ந்த ராஜலெட்சுமி சங்கராபரணம் என்கிற படத்தின் நடித்தவன் மூலமாக கவனம் பெற்றார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ் தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்திருக்கிறார் ராஜலட்சுமி.
தற்போது இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ள நாடகம் என்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்தான்.
இந்த சீரியலில் தனது மகன் மூத்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்த போதிலும் மகனுக்கு ஆதரவு அளிக்காமல் தன் மருமகளுக்கு ஆதரவாக இருக்கும் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் என்ன இருந்தாலும் மகனை விட்டுக் கொடுக்க முடியாமல் மகன் மீது பாசத்தை பொழியும் இவரின் கதாபாத்திரத்தை வெறுக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில சமயங்களில் ஈஸ்வரியின் கதாபாத்திரத்திற்கு ஆதரவும் பல சமயங்களில் ஈஸ்வரியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இரண்டும் கலந்த கலவையாக இந்த பாத்திரத்தை சிறப்பாக கையாண்டு வருகிறார் ராஜலட்சுமி இந்த நிலையில் ராஜலட்சுமியின் மகனுக்கு சமீபத்தில் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
ராஜலட்சுமியின் மகன் திருமணத்திற்காக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் திவ்யா கணேஷ், நேஹா, விஜே விஷால் கம்பம் மீனா, கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ், கோபியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் என்று பாக்கியலட்சுமி சீரியல் குடும்பமே ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.
தற்போது அந்த புகைப்படங்களை பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டு வேலைக்காரியாக செல்வி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் பாக்கியாவிற்கு அடுத்து ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது செல்வி கதாபாத்திரம் தான். கம்பம் மீனா இந்த கதாபாத்திரத்தை திறமையாக கையாண்டு வருகிறார். வீட்டு வேலைக்காரியாக மட்டுமில்லாமல் பாக்யாவின் உடன் பிறவாத தோழியாகவும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
பாக்யாவின் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தோளோடு தோள் கொடுத்து ஒரு சகோதரி போல இருந்து வருகிறார் செல்வி. எனவே செல்வியாக நடித்து வரும் கம்பன் மீனாவை சமூக வலைத்தள கணக்கை பின் தொடர்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்களை அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மீனா.
அந்த வகையில் தற்போது சங்கராபரணம் ராஜலட்சுமியின் மகனின் திருமணம் ஹைதராபாத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் மீனா.
மேலும் ராஜலெட்சுமி அவர்களின் மகன் ரோஹித் மற்றும் கீர்த்தனாவின் திருமணம் இனிதே நடைபெற்றதாகவும் அவர் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
பாக்கியலெட்சுமி சீரியல் ரசிகர்கள் பலரும் ராஜலெட்சுமியின் மகன் திருமணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.