ட்ரெண்டிங் பாடல் ஒன்றுக்கு தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் பாக்கியாவும் அமிர்தாவும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் தான் தசரா. இந்த படத்தில் மைனர் வேட்டி கட்டி என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தில் வரும் பாடலை அவரது மகள் தீ பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுசித்ராவும், அமிர்தவாக நடித்து வரும் ரித்திகாவும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக இருப்பது பாக்கியலட்சுமி. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுசித்ரா. இவர் ஏற்கனவே சைவம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த நாடகம் என்று சொன்னால் அது பாக்கியலட்சுமி தான். சுசித்ரா நம் அம்மாக்களைப் போல மிகவும் பாவப்பட்ட கதாபாத்திரத்தில் அடி தூள் கிளப்பி வருகிறார். மாமியார், மாமனார், கணவர், பிள்ளைகள் என அனைவரின் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழும் ஒரு கேரக்டர். இவரது கணவர் கோபிக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது. இதன் பின்னர் கதையில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையில் விதவை பெண்ணாக இருந்த அமிர்தாவை தனது மகன் எழிலுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார் பாக்கியா.!
கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க தற்போது ரித்திகா மற்றும் பாக்யா இருவரும் இணைந்து தசரா படத்தில் வரும் மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு நடனம் ஆடி அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். இருவரும் இணைந்து அடிக்கடி நடனம் ஆடி வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video.!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O