பாக்கியலட்சுமி சீரியலில் அழுகை சீனில் நடித்துக் கொண்டிருந்த அமிர்தாவை உண்மையாக அழுவதாக நினைத்து அந்த குழந்தையும் அழத் தொடங்கி இருக்கிறது. மேலும் அமிர்தா கண்களில் வழியும் கண்ணீரையும் அது துடைத்து விட்டு, முத்தமும் கொடுத்துள்ளது. அந்த நெகிழ்ச்சியான புகைப்படங்களை தற்போது அமிர்தா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அமிர்தாவும், எழிலும் காதலித்து வந்த நிலையில் எழில் பணத் தேவைக்காக அமிர்தாவை கைவிட்டு விட்டு வர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் இந்த நாடகத்தில் அதிரடியான பல திருப்பங்கள் நடந்து வருகிறது. தனது தந்தைக்கு சவால் விட்டு வீட்டை 70 லட்சம் கொடுத்து தானே வாங்கிக் கொள்வதாக முடிவு எடுத்து இருக்கிறார் எழில். ஆனால் எழில் பார்க்கும் வேலையில் உடனடியாக 70 லட்சம் ரூபாயை எடுக்க முடியாது. இந்த நிலையில் அவர் வேலை பார்த்து வரும் தயாரிப்பாளர் என் மகளை திருமணம் செய்து கொண்டால் 70 லட்சம் ரூபாயை நானே தருகிறேன். அதை வைத்து உங்கள் வீட்டை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆரம்பத்தில் எழில் இதற்கு உடன்படவில்லை. ஏனென்றால் எழிலும் அமிர்தாவும் காதலித்து வருகின்றனர். அமிர்தா திருமணமாகி சில நாட்களிலேயே கணவரை இழந்தவர். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இதனால் அமிர்தா மீது இரக்கப்படும் எழில், அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்தார். தற்போது எழிலின் தந்தை கோபி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். வீட்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக மூத்த மனைவி பாக்யா வாழ்ந்து வரும் வீட்டை விற்கப் போவதாகவும், அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறும் படியும் கோபி கூறி விட்டார். இதனால் எழில் தான் அந்த பணத்தை கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று சபதம் எடுத்து இருந்தார். இப்படியாக முக்கோண காதல் கதையில் மாட்டிக் கொண்டு முடிக்கிறார் எழில். இந்த நிலையில் அமிர்தாவா? வர்ஷினியா? இருவரில் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கட்டாய திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அமிர்தாவை அழைத்து வந்து எழிலுக்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறார் பாக்யா.
இதனால் பல தடைகளை மீறி எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து வைத்துவிடுவார் என்றே தெரிகிறது. இதில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. கணவனை இழந்த ஒரு பெண், கைக்குழந்தையுடன், மாமனார் வீட்டில் எவ்வளவு கஷ்டப்படுவார் என்பதை அழகாக நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் ரித்திகா. ரித்திகாவிற்கு குழந்தையாக நடிக்கும் நிலா பாப்பாவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அமிர்தா, எழிலுக்கு திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு எழிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் பணத்திற்காகத்தான் நான் வர்ஷினியை திருமணம் செய்து கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி அமிர்தா காலில் விழுந்து கதறி அழுகிறார் அப்போது அமிர்தாவும் அழுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன் இதை உண்மை என நம்பிய நிலா பாப்பா ரித்திகாவின் கண்களில் விழுந்த கண்ணீரைத் துடைத்து விட்டு தானும் அழத் தொடங்கி இருக்கிறது. மேலும் அமிர்தாவுக்கு முத்தமும் கொடுத்து இருக்கிறது.
அந்த காட்சிகளை பதிவிட்ட ரித்திகா இந்த குழந்தை நான் அழுவதை நிஜம் என நினைத்து அதுவும் அழுகிற, து என் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்து முத்தம் கொடுக்கிறது என்று ஒரு பதிவை போட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை தான் கள்ளம் கபடமில்லாத உள்ளம் குழந்தைக்கு மட்டுமே இருக்கும் என்று நிலா பாப்பாவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Video Below..!
Youtube Video Code Embed Credits: Rithika Tamilselvi