Categories: சினிமா

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..! வெளியான அழகிய புகைப்படங்கள்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் ரித்திகா. இந்த தொடரில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து போராடிய இவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த தொடரில் நடித்து குடும்ப தலைவிகளை கவர்ந்து உள்ளார் ரித்திகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..! வெளியான அழகிய புகைப்படங்கள்..! 1

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்தார். பின்னர் அங்கிருந்து காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் அசத்தி இருந்தார். இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட இவர் நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் சட்டம் என் கையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வினு என்பவரை திருமணம் செய்த இவர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களிடம் கூறிய இவர் தற்போது அம்மாவாகி இருப்பதாக தெரிவித்து உள்ளார். இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது இவர் தனது மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார்.மகளுக்கு நிலா என பெயர் சூட்டியுள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்