சென்னையில் புது வீடு காட்டி கிரஹ பிரவேசம் செய்துள்ள பாக்கியா.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா தற்போது புது வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு பால் காய்ச்சி கிரஹப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முன்பு ஒரு காலத்தில் சீரியல்கள், நாடகங்கள், நெடுந்தொடர்கள் என்றாலே அது சன் டிவி மட்டும் தான். ஆனால் விஜய் டிவி சீரியலில் காலடி எடுத்து வைத்தப்பிறகு சன்டிவி டல் அடித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. ரியாலிட்டி ஷோக்களில் டாப்பில் இருந்த விஜய் டிவி மெல்ல மெல்ல சீரியல்களை புகுத்த ஆரம்பித்தது. தற்போது சீரியல்களுக்கு என்றே இருக்கும் சன்டிவியை ஓவர் டேக் செய்து டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் புது வீடு காட்டி கிரஹ பிரவேசம் செய்துள்ள பாக்கியா.! இதோ வீடியோ.! 1

அதன்படி குடும்ப பாங்கான தொடர்களை ஒளிபரப்பி அசத்தி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லெட்சுமி, மௌனராகம், பாரதி கண்ணம்மா போன்றவை டாப்பில் இருக்கும் தொடர்கள். இதில் பாக்கியலெட்சுமி தொடர் சற்று வித்தியாசமானது. வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் கதை. இதில் கதாநாயகி சுசித்ரா நம் அம்மாக்களைப் போல மிகவும் பாவப்பட்ட கதாபாத்திரத்தில் அடி தூள் கிளப்பி வருகிறார். மாமியார், மாமனார், கணவர், பிள்ளைகள் என அனைவரின் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழும் ஒரு கேரக்டர். தற்போது பாக்கியாவின் கணவர் பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த கதையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சுசித்ரா. இவர் ஏற்கனவே சைவம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த நாடகம் என்று சொன்னால் அது பாக்கியலட்சுமி தான். தற்போது புது வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு பால் காய்ச்சி கிரஹப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Trending Updates

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்