முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்…! எண்டு கார்டு போட போகும் விஜய் டிவி..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்...! எண்டு கார்டு போட போகும் விஜய் டிவி..! 1

தற்போது இந்த சீரியல் 5ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலை தற்போது முடிக்க திட்டமிட்டு இருப்பதாக,தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் சீரியல் இன்னும் நிறைய மாதங்கள் ஓடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

TRP-ல் உயரத்தில் இருந்த சீரியல் தற்போது சரிந்து உள்ளதால் இந்த தொடரை முடிக்க விஜய் டிவி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீரியல் விரைவில் முடிவுக்கு வர நிறைய வாய்ப்பு இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்