தாம்பூல தட்டுடன் வந்த ஈஸ்வரி? என்னது பாக்கியாவுக்கும் பழனிசாமிக்கும் திருமணமா?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா, கோபி, ஈஸ்வரி, ராமமூர்த்தி என அனைவரும் திருமண விழா ஒன்றில் இருப்பது போலவும், கீழே வெற்றிலை, பாக்கு, தட்டு தாம்பூலங்கள் அனைத்தும் இருப்பது போலவும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால் அடுத்து கதை எப்படி நகரப் போகிறது என்பதை ரசிகர்கள் யூகங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

தாம்பூல தட்டுடன் வந்த ஈஸ்வரி? என்னது பாக்கியாவுக்கும் பழனிசாமிக்கும் திருமணமா? 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்புடன் கதை வேகமாக நகர்ந்து வருகிறது. பாக்யா தனி ஒரு பெண்ணாக இருந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டும், அதே சமயம் ஈஸ்வரி மசாலா, ஐடி கம்பெனி கேன்டீன் கான்ட்ராக்ட், திருமண ஆர்டர்கள் என சுழன்று வருகிறார். இதனுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கும், கல்லூரிக்கும் சென்று அவர் படித்து வருகிறார். பாக்யாவின் கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு பழனிச்சாமி என்பவர் உடன் நட்பு ஏற்படுகிறது.

பழனிச்சாமியை பாக்யாவிற்கு திருமணம் செய்து வைக்க பழனிசாமியின் தாயார் நினைக்கிறார். ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகவே இருந்து விட்டுப் போகிறோம் என்று பழனிச்சாமி கூறுகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஈஸ்வரி கோபி ராமமூர்த்தி என அனைவரும் விழா ஒன்றில் தாம்பூல தட்டுடன் அமர்ந்திருக்கின்றனர். இதைப் பார்த்த பலரும் பழனிச்சாமிக்கும் பாக்யாவிற்கும் திருமணமா? என்ற ரீதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஸ்ரீமோயி என்னும் பெங்காலி கதையை தான் தமிழில் பாக்கியலட்சுமி என எடுத்து வருகின்றனர். அந்த கதைப்படி பாக்கியா கதாபாத்திரத்திற்கும் பழனிச்சாமி கதாபாத்திரத்திற்கும் திருமணம் முடிந்திருக்கும். எனவே தமிழிலும் அது போல் நகர்த்தப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அப்படியாக நகரவில்லை. பாக்யாவின் மூத்த மருமகள் ஜெனிக்கு வளைகாப்பு நடத்தி இருப்பதாகத்தான் தகவல் வெளியாகி இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்