மலேசியாவில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ராவை ரசிகர்கள் பலரும் சூழ்ந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

கடை திறப்பு விழாவிற்காக சென்று அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பலரின் ஃபேவரைட் தொடராக மாறி இருக்கிறது இந்த சீரியல்.
இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஹீரோயினாக நடிக்கும் சுசித்ராவும் ஹீரோவாக நடிக்கும் கோபியும் தான். இருவரின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதில் பாக்கியலட்சுமியாக நடித்து வரும் நடிகை சுசித்ரா, கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் ஏற்கனவே கன்னடத்தில் சில படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் சைவம் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அதன் பின்னர் சில படங்களில் நடித்திருக்கும் அவர் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி என்கிற சீரியலின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இந்த சீரியலில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஒரு நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக, நல்ல மாமியாராக, நல்ல அம்மாவாக என்று பல கதாபாத்திரங்களை திறம்பட ஆற்றி வருகிறார் சுசித்ரா.
இந்த நிலையில் அவர் மலேசியாவில் உள்ள கடை திறப்பு விழா ஒன்றுக்காக சென்றிருக்கிறார். அங்கு அவரை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்திருக்கின்றனர்.
அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் பாக்கியலட்சுமிக்கு மலேசியாவிலும் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே? என்று சொல்லி பதிவிட்டு வருகின்றனர்.