சின்னத்திரையின் நந்தினியா இனியா? 596/600 எடுத்ததால் பாராட்டு விழாவா? கசிந்த புகைப்படம்.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்துள்ளது. அதில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கடைசி மகளாக இருக்கும் இனியாவுக்கு பாராட்டு விழா நடப்பது போலவும், அங்கு அவருடன் ராதிகா அருகில் நிற்பது போலவும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு எழுந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கென்று பல ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. பல தடைகளை மீறி தற்போது தனது கணவரிடம் இருந்து அந்த வீட்டை எழுதி வாங்கி இருக்கிறார் பாக்யா.

சின்னத்திரையின் நந்தினியா இனியா? 596/600 எடுத்ததால் பாராட்டு விழாவா? கசிந்த புகைப்படம்.! 1

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த கட்டம் என்ன நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அடுத்த கதை எப்படி நகரப் போகிறது என்று சில யூகங்கள் வெளியாகி இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி முடித்திருக்கும் இனியா, இன்றைய எபிசோடில் நாளை ரிசல்ட் வரப்போகிறது என்று தனது தாயார் பாக்யாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில் ரிசல்ட் வந்துவிட்டது போலவும், இனியா என்கிற பெயரில் அந்த ரிசல்ட் வெளியாகி 600 க்கு 600 மதிப்பெண் எடுத்திருப்பது போலவும் ஒரு மீம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து இனியா மாலையும் கழுத்துமாக நிற்பது போலவும் அருகே ராதிகா நிற்பது போலவும் புகைப்படங்களும் கசிந்து இருக்கிறது. இதனால் இனியாவிற்கு பாராட்டு விழா நடக்கும்பொழுது அந்த இடத்தில் கோபியோடு அம்மா ஸ்தானத்தில் ராதிகா தான் நிற்கப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.


பாக்யா சமையல் கான்ட்ராக்ட் எடுத்து வீட்டில் இல்லாத காரணத்தினால் ராதிகா தான் இனியாவின் அம்மா இடத்தில் நிற்கிறாரா? இனி என்ன நடக்கும்? இதனால் அடுத்து என்ன பிரச்சனை நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களையே எழுந்திருக்கிறது. சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினியை காப்பியடித்து இனியா ட்ராக் ஓட்டப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதுபோலவே தற்போது நடந்திருப்பதாக தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்