உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி.! அம்ரிதா கழுத்தில் தாலி கட்டிய எழில்.! ஆனந்த கண்ணீர் விட்ட அமிர்தா.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது எழிலுக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. எழில் ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை இழந்த அமிர்தா என்கிற பெண்ணை காதலித்து வருகிறார். அமிர்தாவிற்கு ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது .திருமணம் ஆன சில வருடங்களிலேயே கணவன் இறந்ததால் தனது மாமனார் மாமியாருடன் வசித்து வருகிறார் அமிர்தா. ஒரு குறும்படம் எடுப்பதற்காக அமிர்தாவுக்கும் எழிலுக்கும் அறிமுகம் ஏற்பட, இருவருக்கும் காதலாக மாறியது. பின்னர் இருவரும் நெருங்கி பழகினர். அமிர்தாவை விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தார் எழில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி.! அம்ரிதா கழுத்தில் தாலி கட்டிய எழில்.! ஆனந்த கண்ணீர் விட்ட அமிர்தா.! 1

 

 

25 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு அவரது கணவர் கோபி இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் பாக்யா மற்றும் பிறரும் கோபி கட்டிய வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். எனவே அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் 70 லட்சம் பணத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கோபி கூறுகிறார். இதனால் எழில் நான் எழுபது லட்சம் கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று தனது தந்தையிடம் சவால் விடுகிறார். ஆனால் அவரால் 70 லட்சத்தை சேர்க்க முடியவில்லை. இதற்கு இடையே எழில் சினிமா துறையில் ஒரு தயாரிப்பாளருக்கு கீழ் வேலை பார்த்து வருகிறார். அந்த தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழில் மீது காதல் கொள்கிறார். அதனால் 70 லட்சத்தை நான் கொடுக்கிறேன்.

 

ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எழிலை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள துடிக்கிறார் வர்ஷினி. இதற்கு எழிலின் பாட்டியும், அண்ணன் செழியனும் துணை போகிறார். இந்த நிலையில் இந்த கட்டாயத் திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று பாக்கியா சபதம் போட்டிருக்கிறார். அதற்காக அமிர்தாவை எழிலுக்கும் வர்ஷினிக்கும் திருமணம் நடக்கும் மேடைக்கு அழைத்து வந்து எழில் வாயாலேயே எனக்கு அமிர்தாவை தான் பிடிக்கும் என்று உண்மையை கூற வைத்துவிட்டார் பாக்யா.தற்போது எழிலுக்கும் அமிர்தாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்