18 லட்சத்தை கோபியின் முகத்தில் வீசி எறிந்த பாக்கியா.! பாக்கியாவோட ஆட்டம் ஆரம்பம்.!

வெளியிட்டது

பாக்கியலெட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், கோபிக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாய் பணத்தை, அவரது முகத்தில் விட்டு வீசிவிட்டு கோபி ராதிகாவை வீட்டை விட்டு வெளியில் துரத்தி இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இதில் கதாநாயகன் கோபி தனது மூத்த மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் ராதிகாவுடன் பிரச்சினைகள் ஏற்படவே, கோபியின் தாயார் ஈஸ்வரி கோபியை மீண்டும் பாக்யாவின் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார். பாக்யா, கோபி, ராதிகா, ராதிகா மகள் மயூ என அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினர். இது இன்னும் பிரச்சினையை கிளப்பியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

18 லட்சத்தை கோபியின் முகத்தில் வீசி எறிந்த பாக்கியா.! பாக்கியாவோட ஆட்டம் ஆரம்பம்.! 1
கோபியோ இது தான் கட்டிய வீடு, பாக்யா மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாக்யாவிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்தார். ஏற்கனவே பாக்யா பல சமையல் ஆர்டர்களைப் பிடித்து கோபிக்கு பல லட்சம் ரூபாய் கடனை அடைத்துவிட்டார். மீதம் 18 லட்சம் மட்டுமே இருந்த நிலையில் 1 மாதத்தில் கடனை அடைத்து விட்டால் கோபியும் ராதிகாவும் இந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று பாக்யா சவால் விட்டு இருந்தார். இதற்கிடையில் பாக்யாவுக்கு நண்பர் பழனிச்சாமி மூலம் மிகப்பெரிய சமையல் ஆர்டர் ஒன்று கிடைத்திருந்தது. 5000 பேருக்கு சமைத்தன் மூலமாக அவருக்கு பணம் கிடைத்திருந்தது. ஆனால் 10 லட்சம் இன்னும் தேவைப்பட்ட நிலையில் பாக்யா குழப்பத்தில் இருந்தார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாக்யா கோபிக்கு தர வேண்டிய பாக்கி 18 லட்சத்தை அவரது முகத்தில் விட்டு வீசி எறிந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் கோபி, ஏதோ பேச முயற்சிக்க, ராதிகாவோ நாம் வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று சொல்லி கோபியை சமாதானம் செய்கிறார். பின்னர் கோபியும் ராதிகாவும் பெட்டி படுக்கையுடன் வீட்டை காலி செய்து விட்டு புறப்படுகின்றனர். அப்போது தனது மகன்களிடம் “மூட்றா கேட்டை” என்று கெத்தாக கூறுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்