சூடு சொரணை இருந்தா வீட்டை விட்டு வெளியே போடி.! பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் இனியாவை தேடி ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் பாக்கியலட்சுமியை கோபி பயங்கரமாக அசிங்கப்படுத்தி வெளியே துரத்தி விடுகிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இனியா பள்ளியில் இருந்து மகாபலிபுரத்திற்கு பிக்னிக் செல்கிறார். ஆனால் அவர் செல்லும் வாகனம் மற்றொரு வாகனத்தால் இடித்து விபத்துக்குள்ளாகிறது. ஆனால் குழந்தைகளுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. பள்ளியிலிருந்து கோபி மற்றும் பாக்யா இருவருக்கும் ஒரே நேரத்தில் அழைப்பு செல்கிறது. இதனால் பதறி அடித்துக் கொண்டு இருவரும் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் கோபி காரில் வந்ததால் விரைந்து பள்ளிக்கு வந்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூடு சொரணை இருந்தா வீட்டை விட்டு வெளியே போடி.! பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி.! 1

பாக்கியலட்சுமி வருவதற்குள் இனியாவை பார்த்து விட்டார் கோபி. பாக்கியலட்சுமி ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி, இனியாவை அவரது கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று மறைமுகமாக அழைத்துச் சென்று காரில் ஏறி வேகமாக சென்று விடுகிறார். இதை கவனித்த பாக்யா காரின் பின்னாடியே ஓடுகிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது. இந்த வார ப்ரோமோவில் ராதிகா வீட்டிற்கு பாக்கியலட்சுமி வருகிறார். அங்கு வந்து தான் இனியாவை பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபி இனியா இருக்கும் அறையை பூட்டிவிட்டார். நீ இனியாவை பார்க்க முடியாது, வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இந்த வீட்டை விட்டு இப்போதே வெளியே செல். இல்லை என்றால் கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்பி விடுவேன் என்று பயங்கரமாக அசிங்கப்படுத்துகிறார்.


பின்னர் வீட்டிற்கு வரும் பாக்கியலட்சுமி நடந்ததை கூறி அழுது கொண்டிருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வரும் ராமமூர்த்தி இனியாவுக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை, நீ கவலைப்படாதே என்று சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறார். பின்னர் மீண்டும் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் ராம மூர்த்தியிடம் இனியா பாக்யாவை பற்றி கேட்கிறார். அம்மா என்ன செய்கிறார்கள் அழுது கொண்டிருக்கிறார்களா என்று கேட்க ஆமாம் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறார் என்று ராமமூர்த்தி சொல்கிறார். அப்போது எனது அப்பாவை எப்படியாவது பிரித்து நான் அம்மாவுடன் சேர்த்து விடுவேன் என்று இனியா பேசிக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த ராதிகா, என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்? உனது தாய்க்கும் கோபிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. எப்படி சேர்த்து வைப்பாய் என்று கேட்கிறார். அதெல்லாம் நாம் சேர்த்து விடுவேன் என்று இனியா கோபமாக பதில் அளிக்கிறார் அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the below video..!

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்