Categories: சினிமா

20 வருஷத்துக்கு முன்னாடியே மக்களே காறித் துப்புன படம் இது.! மூட நம்பிக்கையை வளக்குற முட்டாள்தனமான படம் இது

வெளியிட்டது

பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது பாபா படம் குறித்த தனது விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார். எந்த முன்னணி நடிகராக இருந்தாலும் சரி எப்பேர்ப்பட்ட இயக்குனர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எடுக்கும் திரைப்படங்களை மிகவும் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்து வரும் ஒரு நபர்தான் ப்ளூ சட்டை மாறன். இவருடைய வீடியோக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். தமிழ் டாக்கீஸ் என்கிற ஒரு youtube சேனலை வைத்து இவர் பலருடைய படங்களையும் விமர்சனங்கள் செய்து வருகிறார். இவர் தற்போது ரஜினியின் பாபா படத்தையும் விமர்சனம் செய்திருக்கிறார். பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தை சில மெருகேற்றங்கள் செய்து ரீ ரிலீஸ் செய்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

20 வருஷத்துக்கு முன்னாடியே மக்களே காறித் துப்புன படம் இது.! மூட நம்பிக்கையை வளக்குற முட்டாள்தனமான படம் இது 1
பாட்ஷா, அண்ணாமலை, வீரா என்று ரஜினி வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் 2002 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து பாபா படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ரஜினியின் தாயார் கதாபாத்திரத்தில் நடிகை சுஜாதா, தாத்தாவாக நம்பியார், தோழர்களாக கவுண்டமணி போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த பாபா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அந்த காலத்திலேயே இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மந்திரங்கள், பாபா முத்திரைகள் என்று பாபா படம் ஆன்மீகம் சார்ந்த இருந்தது. மேலும் படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றியை கொடுக்காத காரணத்தினால் தற்போது மீண்டும் ரீலீஸ் செய்து இருக்கிறார் ரஜினி.

தற்போது இந்தப் படம் குறித்து பேசிய ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். படத்தில் ஹீரோ சாப்பாடுக்கு என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. கடைசியில் கூலி வேலை பார்க்கிறார், படம் முழுக்க பட்டையும் கொட்டையும் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பே இந்த படத்தை மக்கள் காறித் துப்பி விட்டார்கள். இந்தப் படத்திற்கு கொடுத்த நஷ்ட ஈடை மீண்டும் திருப்பி எடுத்து விடலாம் என்று ரஜினி இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். நீங்களும் அவரது விமர்சனத்தை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்