திரௌபதி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் மோகன். இந்த படம் பிற்போக்கு தனங்கள் நிறைந்த கருத்துக்களை கொண்டுள்ளது என்று சொல்லி நெட்டிசன்களும், பொது மக்களும் இவரை வறுத்து எடுத்துவிட்டனர். இந்த காலத்தில் போய் சாதி, பெண் அடிமை பற்றியெல்லாம் பேசி ஒரு நெகடிவ் பப்ளிசிட்டியை தேடிக்கொண்டது இந்த படம். அதனால் வசூலுக்கு பஞ்சமில்லாமல் நிறைய நாட்கள் ஓடியது. இதற்கு அடுத்தபடியாக இவர் இயக்கிய படம் ருத்ரதாண்டவம். இந்த படம் குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்தன. இவர் படம் இயக்கினாலே அது பிரச்சினைதான் என்று சிலர் விமர்சனங்களை முன் வைக்க, நெகடிவ் பப்ளிசிட்டி மூலம் வசூலை குவித்து விடுகிறார் என்ற விமர்சனங்களும் இவர் மீது எழுவதுண்டு.

தற்போது இவர் அடுத்து இயக்கும் படம் குறித்து போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் பாகாசூரன் என்று தலைப்பு இருந்தது. இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிஷி தான் ஹீரௌவாக நடித்தார். ஆனால் மோகன் ஜி இயக்கும் இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் ஒருவர்தான் செல்வராகவன், இவர் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரரும் ஆவார். தற்போது படங்கள் இயக்கிவதை விட நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்தார். பீஸ்ட் படத்தில் கூட நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சர்ச்சை இயக்குனர் மோகன் ஜி இயக்கும் படத்தின் டைட்டிலுடன் சேர்த்து போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த மோகன் ஜி “ஈசன் அருள்”, “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்றும் “பகாசூரன்” என்ற தலைப்புடன் போஸ்டரும் வைத்து பதிவிட்டு இருந்தார். ஏற்கனவே இரண்டு படங்கள் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது பகாசூரன் என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.
செல்வராகவனை வைத்து மோகன் ஜி என்ன செய்ய போகிறாரோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தற்போது படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் படத்தின் போஸ்டரை அப்படியே காபி அடித்துள்ளனர். இதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து வச்சி செய்து வருகின்றனர்