பாலாஜி முருகதாசின் பிறந்தநாள்.! நைட் பார்ட்டிக்கு அம்மாவுடன் சென்ற ஷிவானி நாராயணன்.!

வெளியிட்டது

பாலாஜி முருகதாஸின் பிறந்தநாள் நைட் பார்ட்டிக்கு ஷிவானி தனது தாயாருடன் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் நான்கில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கும் ஆரிக்கும் இடையே நடந்த சண்டை மிகப் பிரபலம். இவரை பலரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று அப்போது பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்ததால் இவர் வெளியேற்றப்படவில்லை. இவர் அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். அதற்கு பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். இந்த சீசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. நேரடியாக hotstar-ல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீசனில் வின்னராக இவர் வந்தார். 35 லட்சம் பரிசு தொகையுடன் இவர் வெற்றி பெற்றார்.

பாலாஜி முருகதாசின் பிறந்தநாள்.! நைட் பார்ட்டிக்கு அம்மாவுடன் சென்ற ஷிவானி நாராயணன்.! 1
பிக்பாஸ் சீசன் 4ல் இருந்த போது இவரும் சிவானியும் காதலிப்பது போன்று இருந்தது. அப்போது உள்ளே வந்த சிவானியின் தாய் சிவானியை கண்டபடி திட்டினார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. மேலும் பாலாஜி முருகதாஸ் இடம் சிவானியின் தாய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பிக்பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு பாலாஜி முருகதாஸுடன் இணைந்து ஷிவானி பல இடங்களில் ஊர் சுற்றி வருகிறார். பாலாஜி முருகதாஸை ஆரம்பத்தில் புரிந்து கொள்ளாத சிவானியின் தாய் தற்போது அவரை புரிந்துகொண்டு உள்ளார். மூவரும் சேர்ந்து அடிக்கடி செல்பி எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸுக்கு பிறந்தநாள். அப்போது ஷிவானி தனது தாய் மற்றும் பாலாஜி முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.


இந்த புகைப்படத்தை பகிர்ந்து பாலாஜி முருகதாஸுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் சிவானி. இந்த புகைப்படத்திற்கு கீழே பலரும் ஆண்ட்டி நீங்க எங்க எங்கே? என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் மருமகன் கூட செல்பி எடுத்து இருக்கிறீர்களா ஆன்ட்டி என்றும் காமெடியாக அவர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்