பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி தற்போது பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் இந்த முறை திருநங்கைக்கு பதிலாக மாயா என்கிற ஓரினச்சேர்க்கையாளரை போட்டியாளராக எடுத்துள்ளார்கள் என்று சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் மாயா குறித்து பேட்டி அளித்திருந்த முன்னாள் போட்டியாளரும் பாடகியமான சுசித்ரா, “மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர், அவர் ஒரு மோசமானப் பெண்” என கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது பயில்வான் ரங்கநாதனும் மாயா பற்றிய சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் அவர், “பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது xxx டிராமா போல ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் தரம் குறைந்துவிட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். குறைவான வாக்குகள் வாங்குபவர்கள் வெளியேற்றப்படுவார்கள். மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் அந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது. ஆனால் தற்போதயெல்லாம் அப்படி இல்லை. கமல் கொடுக்கும் பதில்கள் மற்றும் தீர்ப்புகளில் தெளிவு இல்லை. ஒரு வயதிற்கு பின்னர் உடல் தடுமாற்றம், மூளை தடுமாற்றம் எல்லாம் வரும். கமலஹாசனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. வயதான காலத்தில் கோபம் வரும் பொழுது அதன் தன்மை நடுநிலையாக இருக்காது. அது கமலுக்கும் பொருந்தும். கமலின் இந்த கோபத்தின் வெளிப்பாடு அவரது சமநிலையை கெடுக்கிறது.
மேலும் மாயா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று என்னிடமே சில நடிகைகள் கூறினார்கள். முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் திருநங்கை ஒருவர் உள்ளே செல்வது வழக்கம் ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பில்லாததால் லெஸ்பியன் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். மாயாவின் பேச்சு, நடவடிக்கை எல்லாம் அதுபோலத்தான் இருக்கும். முதல் நாளே பிக்பாஸில் ஆண்களுடன் சண்டை செய்தது மாயாதான். மாயா ஒரு விஷப்பாம்பு, சகுனி என்று ஆரம்பத்திலேயே நான் சொன்னேன். பிக்பாஸ் நிகழ்ச்சி நடுநிலையாக நடத்தப்பட்டிருந்தால் இரண்டாவது வாரத்திலேயே மாயா வெளியே அனுப்பப்பட்டிருக்க வேண்டும்” என்று பயில்வான் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Facebook Video Embed Code Credits: Metro Mail