“கேப்டன் மேல சிவகுமார் குடும்பத்துக்கு அந்த கோபம் இன்னைக்கும் இருக்கு” பயில்வான் அதிர்ச்சி தகவல்

வெளியிட்டது

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு வந்த சூர்யாவை தற்போது பயில்வான் ரங்கநாதன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். கேப்டன் இறந்து எட்டு நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து சூர்யா வந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் பயில்வான் ரங்கநாதன் சூர்யாவை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கேப்டன் சமாதியில் அழுத சூர்யாவின் செயலை ‘நடிப்பு’ என்று அவர் விமர்சித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கேப்டன் மேல சிவகுமார் குடும்பத்துக்கு அந்த கோபம் இன்னைக்கும் இருக்கு" பயில்வான் அதிர்ச்சி தகவல் 1

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரிழப்பாக அமைந்திருந்தது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணம் தான். அவரின் மரணத்தை தமிழக மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. பொதுமக்கள் அனைவரும் வழிநெடுகிலும் திரண்டு நின்று கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதில் பல சினிமா பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக சூர்யா வெளிநாட்டில் இருந்த போது காரில் சென்று கொண்டே கேப்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று சென்னை திரும்பிய சூர்யா கேப்டன் நினைவிடத்திற்கு சென்று கண்கலங்கி அழுதார்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயில்வான் ரங்கநாதன் சூர்யா குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். “யாராவது காரில் சென்று கொண்டே இரங்கல் தெரிவிப்பார்களா? அதுவே முதலில் தவறு. பின்னர் இங்கு வந்து அழுது புரண்டு நாடகம் போடுவதெல்லாம் நீங்கள் நடிகர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்” என்று சொல்லி கடுமையாக விமர்சித்திருக்கிறார் அவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Madras Movie

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்