பயில்வான் ரங்கநாதனும் தயாரிப்பாளர் கே ராஜனும் மேடையில் வைத்து கடுமையாக சண்டை போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போடா எச்சக்கல என்று கடுமையான வார்த்தை பரிமாற்றங்களை அவர்கள் செய்து கொண்டனர். திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவருக்கு தற்போது படங்களின் நடிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டதால் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் நடிகர் நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களை பகிர்ந்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நயன்தாரா தொடங்கி அனைவர் பற்றியும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். பத்திரிகைகளில் வந்த செய்தியை தான் சொல்கிறேன் நானாக சொல்லவில்லை என்று சொல்லி அவர் தொடர்ந்து சினிமா துறையை சேர்ந்தவர்களை பற்றி விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவரின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். பலரும் பயில்வான் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனாலும் பயில்வான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி ஒரு கருத்தை பயில்வான் கூற அது மிகப்பெரிய சர்ச்சையானது. கடற்கரையில் ஒரு நாள் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது ரேகா நாயர் பயில்வானை செருப்பை கழட்டி அடிக்க சென்ற நிகழ்வு வரை நடந்தது. இது போல் தொடர்ந்து பயில்வானுக்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் கே ராஜனும் பயில்வனை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
கேராஜன் பேசும் பொழுது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பத்திரிக்கையாளருடன் அமர்ந்திருந்த பயில்வான் எழுந்து சண்டை போடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக, அடுத்தவன் பெட் ரூமை எட்டிப் பார்ப்பவன் தானே நீ, எச்சக்கலை என்று கே ராஜன் திட்டினார். மேலும் வெளியே போடா என்ற ராஜன் கத்த, பதிலுக்கு பதில் பயில்வானும் நீ போடா என்று சொல்லிவிட்டு அந்த அரங்கில் இருந்து வெளியேறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Kolly Infos