விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் திரைப்படங்கள், சின்ன திரைகளில் ஸ்டாராக ஜொலித்து வருகிறார்கள். தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசனில் வெற்றி நடை போட்டு வருகிறது. சீசன் 6 தொடங்கி சுமார் 78 நாட்களை கடந்து விட்டது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை 21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீசன் 6ல் தற்போது 12 போட்டியாளர்கள் வெளியேறிவிட ஒன்பது போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் பார்க்கும் விதமாக லைவாக ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. இதனால் போட்டியாளர்கள் செய்வதை நேரடியாக காண முடிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய முதல் நாளில் இருந்து சண்டை இருந்து வருகிறது. இந்த சீசனின் விறுவிறுப்புக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி என மொத்தம் 12 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். கடந்த வாரம் ஜனனி வெளியேறிய போது குறைவான வாக்குகள் வாங்கிய போட்டியாளர்களை விட்டுவிட்டு ஜனனியை வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் இந்த வாரம் தனலட்சுமி வெளியேறிய போது மைனா, கதிரவன், ரட்சிதா போன்ற குறைந்த பங்கெடுப்பு உள்ள போட்டியாளர்களை விட்டுவிட்டு டிஆர்பிக்காக ஆக்ட்டிவாக விளையாடி வந்த தனலட்சுமியை வெளியேற்றி இருக்கிறார்கள் என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் தனலட்சுமி ரசிகர்கள்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரம் Freez டாஸ்க் நடைபெறுகிறது. அப்போது போட்டியாளர்களின் வீட்டில் இருந்து நபர்கள் வந்துள்ளார்கள். அவர்களை பார்த்ததும் அனைவரும் அழுகின்றனர். அஇதுவரை மைனா, ரட்சிதா, மணி, ஷிவின், அமுதவாணன், ADK ஆகியோர் வீட்டில் இருந்து நபர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் கதிரவன், விக்ரமன், அசீம் ஆகிய மூன்று பேர் வீட்டில் இருந்து மட்டும் இன்றைக்கு ஆட்கள் வருவார்கள். காலை வெளியான ப்ரோமோவில் கதிரவன் வீட்டில் இருந்து ஆட்கள் வர, தற்போது அசீம் தம்பி மற்றும் நண்பர்கள் வந்துள்ளனர். அசீம் தனது மகன் ரயான் அல்லது பெற்றோர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தம்பி வந்துள்ளது குறிப்படத்தக்கது.நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television