வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட தனலட்சுமி, மீம்ஸ் போட்டு வச்சி செய்யும் ஜிபி முத்து ரசிகர்கள்

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்களை கடந்து விட்டது. ஆரம்பித்த நாள் முதல் நான்கு நாட்களாகவே வீடு அமைதி இழந்து காணப்படுகிறது. ஏனென்றால் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே பிக் பாஸ் ஒரு போட்டியை கொடுத்தார். அதில் குறைந்த அளவு கவர்ந்த நபர்கள் நான்கு பேரை தேர்வு செய்ய வேண்டும், அந்த நான்கு நபர்கள் வீட்டிற்கு உள்ளே இருக்கக் கூடாது வெளியில் தான் சாப்பிட வேண்டும் தூங்க வேண்டும், நால்வரும் இந்த வார இறுதியில் நேரடி நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றெல்லாம் வெடியை கொளுத்தி போட்டார் பிக்பாஸ். இதனால் தொடர்ந்து சண்டைகள் நடந்து வருகிறது. முதலில் தேர்வான நான்கு பேர் எதுவும் பேசாமல் வெளியில் சென்று படுத்து உறங்கினர். ஆனால் அந்த இடத்தில் ஒரு ட்விஸ்டை கொடுத்தார் பிக்பாஸ்.

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட தனலட்சுமி, மீம்ஸ் போட்டு வச்சி செய்யும் ஜிபி முத்து ரசிகர்கள் 1

அது என்னவென்றால் அந்த நான்கு பேர், அவர்கள் டீமில் இருக்கும் யாராவது ஒருவரை மாற்றிவிட்டு அவர்கள் உள்ளே செல்லலாம். புதிதாக வந்தவர்கள் அதேப்போல் வெளியில் படுத்து உறங்க வேண்டும் என்று பிக்பாஸ் ஒரு குண்டை தூக்கி போட்டார். அவர் இப்படி சொன்ன பிறகு பின்பு வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை ஆரம்பித்தது. குறிப்பாக ஆயிஷா ஜிபி முத்துவை பார்த்து பாத்திரம் கழுவும் டீமில் இருந்து கொண்டு சமைக்கும் டீமுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அதனால் அவரை வெளியே அனுப்ப வேண்டும், நான் அவரை மாற்றிக் கொள்கிறேன் என்று அவரது டீம் மேட்ஸிட்டம் கூறினார். அங்கே இருந்து சண்டை தொடங்கியது. ஆயிஷா ஜிபி முத்து என்று இருந்த சண்டை தனலட்சுமி ஜிபி முத்துவாக மாறியது.

தனலட்சுமி ஒரு கட்டத்தில் ஜிபி முத்துவை பார்த்து நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொல்ல, அதனால் மனமுடைந்து போன ஜிபி முத்து மனம் உடைந்து அழுது கொண்டிருந்தார். மேலும் நீ வா போ என்று ஜிபி முத்து பேசுகிறார் அது எனக்கு பிடிக்கவில்லை என்றும் தனலட்சுமி கூறினார் .இன்று காலை வெளியான ப்ரோமோவில் ஜனனி நீ வா போ என்று அவர் பேசினார் என்றால் அவர் அப்பா வயதில் இருக்கிறார், அதனால் அவர் எகிறி பேசியதில் தப்பு ஒன்றும் இல்லை என்று கூறி தனலெட்சிமியை நாமினேட் செய்தார் ஜனனி. தற்போது மீண்டும் தனலட்சுமிக்கும் ஜனனிக்கும் ஏதோ ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பார்க்கும் பார்வையாளர்கள் தனலட்சுமி மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.

குறிப்பாக ஜிபி முத்துவின் ரசிகர்கள் தனலட்சுமி மீது கோபமாக இருக்கின்றனர். அனைவரையும் சிரிக்க வைத்த அந்த மனிதரை போய் இப்படி அழ வைத்துவிட்டார் என்று அவர் மீது தொடர்ந்து மீம்ஸ்களையும் போட்டு வருகின்றனர். மேலும் இன்று காலை ஜனனி ஜி பி முத்துவை நாமினேஷனில் இருந்து காப்பாற்றி தனலட்சுமியை நாமினேட் செய்துள்ளதால் இந்த வார எவிக்ஷனில் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபி முத்துவின் ரசிகர்கள் தனலெட்சுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை நிகழ்த்திக் காட்டுவோம் என்று சபதம் எடுத்திருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்