பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்ப விருந்தினராக பிரபல நடிகை ஸ்ரீபிரியா வந்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்துள்ளனர். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெளியில் வந்த பிறகு பிரபலங்களாக மாறி விடுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 1 முதல் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஆர்த்தி அவரது கணவர் கணேஷ், அமீர் பாவணி, தாமரைச்செல்வி அவரது கணவர், அபிஷேக் ராஜா நாடியா, சுஜா வருணி அவரது கணவர் சிவகுமார் போன்ற பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரியங்காவும், பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜூவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். சீசன் 1 கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து சீசன் 2 நடந்து வருகிறது. சீசன் 1ல் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணனும் நகுலும் இருந்தனர். தற்போது சீசன் 2வில் ரம்யா கிருஷ்ணன் உடன் நடன இயக்குனர் சதீஷ் இணைந்து இருக்கிறார். மிக நன்றாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகின்றனர். செலிபிரேஷன் வித் பேமிலி அண்ட் ப்ரண்ட்ஸ் என இந்த போட்டியின் ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. அவர்களும் போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாடியும் காமெடி ஸ்கிரிப்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவகுமார் சுஜா வருணிக்கு ஸ்ரீபிரியா வருகிறார். அப்போது ஸ்ரீபிரியா சிவகுமார் பற்றி கண் கலங்கி பேசுகிறார். சிவக்குமார் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று வந்த இவருக்கு திரைத்துறை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அவர் பேசும் பொழுது அவரது தந்தை மகன் சிவக்குமாரை நிராகரித்தது குறித்து பேசுகிறார். மேலும் சிவகுமார் யாரையும் எதிர்பார்க்கூடாது என்று டப்பிங் பேசி வாழ்க்கையை நடத்தியதாக கண் கலங்கி பேசினார். அதை பார்த்த ரம்யா கிருஷ்ணன், சுஜா வருணி போன்றவர்களும் கண் கலங்கி அழுகின்றன..அந்த ப்ரோமோவை நீங்களும் காண…Watch the below Video…
Youtube Video Code Embed Credits: Vijay Television