நயன்தாராவின் திருமண ஆடை போல் அணிந்துகொண்டு அலப்பறை செய்த ஆர்த்தி

வெளியிட்டது

நயன்தாராவின் திருமண உடை போன்றே அணிந்து போட்டோ சூட் நடத்திய காமெடி நடிகை ஆர்த்தியின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பகிர்ந்து அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி என்று பதிவிட்டு இருந்தது சமீபத்தில் வைரலானது. தமிழ் திரை உலகில் பெண் காமெடியாளர்களில் முக்கியமானவர் தான் நடிகை ஆர்த்தி. இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பல படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சையான போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் தற்போது நயன்தாரா திருமணத்தின் போது அணிந்திருந்த உடை போலவே அணிந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நயன்தாராவின் திருமண ஆடை போல் அணிந்துகொண்டு அலப்பறை செய்த ஆர்த்தி 1

அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகி இருக்கிறது. நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நயன்தாரா ஒரு சிவப்பு நிற உடையில் தோன்றினார். அவரது உடை பிரத்தியேகமான ஆடை வடிவமைப்பு குழுவால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆடையில் பழங்கால கோவில்களின் கோபுரங்கள் மற்றும் சின்னங்கள் போன்றவை பொறிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆர்த்தியும் சமீபத்தில் திருமணம் முடித்த நயன்தாராவின் உடை போலவே அணிந்திருந்தார் . இதை அவரே சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு என்ன கொடுமை சார் என்றும், எக்ஸ்பக்டேசன் வெர்சஸ் ரியாலிட்டி என்றும் ஜாலியாக பதிவிட்டு இருந்தார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் மை டியர் ஆர்த்தி என்று பதிவிட்டு இருந்தார்.

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் நடனமாடி கலக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆர்த்தியும் அவரது கணவர் கணேசும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியின் போது நடிகை ஆர்த்தி நயன்தாராவின் திருமண உடை போன்ற ஒரு உடையை அணிந்து நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்