பிபி ஜோடிகளில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. சுஜா சிவகுமாருக்கு அடித்த ஜாக்பாட்

வெளியிட்டது

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி டைட்டிலை வென்று இருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து சுஜா வருணி மற்றும் சிவகுமாரும் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இந்த சீசனில் இரண்டு போட்டியாளர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்துள்ளனர். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெளியில் வந்த பிறகு பிரபலங்களாக மாறி விடுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 1 முதல் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது விஜய் டிவி.

பிபி ஜோடிகளில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. சுஜா சிவகுமாருக்கு அடித்த ஜாக்பாட் 1

இந்த நிகழ்ச்சியில் ஆர்த்தி அவரது கணவர் கணேஷ், அமீர் பாவணி, தாமரைச்செல்வி அவரது கணவர், அபிஷேக் ராஜா நாடியா, சுஜா வருணி அவரது கணவர் சிவகுமார் போன்ற பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரியங்காவும், பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜூவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். சீசன் 1 கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து சீசன் 2 நடந்து வருகிறது. சீசன் 1ல் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணனும் நகுலும் இருந்தனர். தற்போது சீசன் 2வில் ரம்யா கிருஷ்ணன் உடன் நடன இயக்குனர் சதீஷ் இணைந்து இருக்கிறார்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி டைட்டிலை வென்று இருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து சுஜா வருணி மற்றும் சிவகுமாரும் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இந்த சீசனில் இரண்டு போட்டியாளர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளனர். முதல் முறையாக இரண்டு பேரை வெற்றியாளராக அறிவித்துள்ளது பிக்பாஸ் ஜோடிகள் டீம்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்